தமிழகம்

நலம் விசாரித்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

செய்திப்பிரிவு

சென்னை: வைரஸ் தொற்​றால் பாதிக்​கப்​பட்​டுள்ள திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தனது உடல்​நலம் குறித்து விசா​ரித்த அனை​வருக்​கும் நன்றி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: வைரஸ் தொற்​றால் ஏற்பட்ட காய்ச்​சலைத் தொடர்ந்​து, மருத்​து​வர்களின் அறி​வுரைப்​படி வீட்​டிலேயே ஓய்​வெடுத்து வரு​கிறேன். இன்​னும் 2 அல்​லது 3 நாட்​கள் வீட்​டிலேயே ஓய்​வெடுக்க உள்​ளேன்.

இதன்​காரண​மாக ஏற்​கெனவே திட்​ட​மிட்ட நிகழ்ச்​சிகள் தள்ளிவைக்​கப்​பட்​டுள்​ளன. முப்​பெரும் விழா தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும். தமிழகத்​தின் பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் இயக்​கங்​களைச் சேர்ந்த தலை​வர்​கள், கலை​யுலக நண்​பர்​கள் எனது அலு​வல​கத்​தைத் தொடர்​பு​கொண்​டு, எனது உடல்​நலம் குறித்து அன்​புடன் விசா​ரித்​துள்​ளனர். கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​கள் மட்​டுமின்​றி, பிற கட்​சிகளின் தலை​வர்​கள் காட்​டிய அன்​புக்​கும் அக்​கறைக்​கும் எனது மனமார்ந்த நன்​றி.

அண்ணா பிறந்​த​நாளில் கட்​சி​யினர் நடத்திய பல்​வேறு நிகழ்ச்​சிகளைக் கண்டு மகிழ்ந்​தேன். செப்.17-ல் பெரி​யார் பிறந்​த​நாளை​யும், திமுக தொடங்​கப்​பட்ட நாளை​யும் கட்​சி​யினர் எழுச்​சி​யுடன் கடை​பிடிக்க வேண்​டும்.

பெரி​யார் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​து​வதுடன், சமூகநீதி நாள் உறு​தி​மொழியை அனைத்து கட்சி அலு​வல​கங்​களி​லும் ஏற்க வேண்​டும். கட்​சி​யின் 78-ம் ஆண்டு தொடக்​கத்​தைக் குறிக்​கும் வகை​யில் கொடிஏற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT