சென்னை: “சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர்” என அவரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள். தன்னலத்தை விடுத்து தமிழ்நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய எதிர்ப்புக் களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவருக்கு என் புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.