கோப்புப் படம்
சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
இதற்காக ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் டிச.22-ம்தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.