புதுக்கோட்டையில் திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் படம் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்.

 
தமிழகம்

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட அமைச்சர்கள்

தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை/கோவை/புதுவை: ​முதல்​வர் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் திரைப்​படம் உலகம் முழு​வதும் நேற்று வெளியானது. தமிழகம் முழு​வதும் 1000 திரையரங்​கு​களில் திரை​யிடப்​பட்ட நிலை​யில் ரசிகர்​கள் மிகுந்த கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். நகரப்​பகுதி மட்​டுமில்​லாமல் கிராமப்​புறங்​களி​லும் அனைத்துதிரையரங்​கு​களி​லும் ஜனநாயகன் படம் வெளியானது.

திரையரங்​கம் முன்பு கட் அவுட்​டுக்கு பால் அபிஷேகம் செய்​தும் மேள​தாளம் முழங்​க​வும் ரசிகர்​கள், தொண்​டர்​கள் நடன​மாடினர். பல்​வேறு இடங்​களில் பட்​டாசு வெடித்​தும் கொண்​டாடினர். இந்​நிலை​யில் ஜனநாயகன் திரைப்​படத்தை பார்த்​த​போது அமைச்​சர்​கள் முகமது பர்​வேஸ், சம்​பத்​கு​மார் மற்​றும் விக்​னேஷ் ஆகியோர் உணர்ச்சிப் பெருக்​கால் கண்​ணீர் விட்டு அழுதனர். இந்தக் காட்சி வேக​மாக பரவி வரு​கிறது.

புதுக்​கோட்​டை​யில் நேற்று ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் பார்த்த தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் நெகிழ்ச்​சி​யில் கண்​ணீர் விட்டார்.புதுக்​கோட்டை மேல​ராஜ வீதியில் உள்ள ஒரு திரையரங்​கில் அமைச்​சர் முகமது பர்​வேஸ் கட்​சி​யினருடன் சென்று திரைப்​படத்தை பார்த்து ரசித்​தார்.

அப்​போது, திரை​யில் விஜய்​யைப் பார்த்​ததும் தன்னை அறி​யாமலேயே நெகிழ்ந்து கண்​ணீர் விட்​டார். இதே​போல, கரூர் திண்​ணப்பா திரையரங்​கில் ஜனநாயகன் படத்தை பார்த்த தவெக மேற்கு மாவட்ட செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், திரை​யில் விஜய் தோன்​றியதும் அதைப் பார்த்து தேம்​பித் தேம்பி அழு​தார்.

கோவை​யில்​... கோவை நூறடி சாலை​யில் உள்ள கங்கா திரையரங்​கில் பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை அமைச்​சர் சம்​பத்​கு​மாரும், போத்​தனூர் சாரதா மில் சாலை​யில் உள்ள அரசன் திரையரங்​கில் மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வை​கள் துறை அமைச்​சர் கே.​விக்​னேஷூம் ரசிகர்​களு​டன் அமர்ந்து படம் பார்த்​தனர். படம் முடி​யும் தரு​வா​யில் அமைச்​சர்​கள் சம்​பத்​கு​மார், விக்​னேஷ் ஆகியோர் உணர்ச்சி பெருக்​கால் கண்​ணீர் விட்டு அழுதனர்.

புதுச்​சேரி: புதுச்​சேரி​யில் நேற்று காலை 7 மணிக்கு ஜனநாயகன் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில் காட்​சிகள் ரத்து செய்​யப்​பட்​டன. பல திரையரங்​கம் முன்பு காலை முதலே ரசிகர்​கள் காத்​திருந்​தனர். நேற்று காலை 10.45 மணி​யள​வில்​தான் முதல் காட்சி தொடங்​கியது. படம் தொடங்​கிய​தும் ‘தமிழக முதல்​வர் விஜய்’ என டைட்​டில் வந்​தவுடன் ரசிகர்கள் கோஷம் எழுப்பியும் விசில் அடித்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

SCROLL FOR NEXT