கோப்புப்படம்

 
தமிழகம்

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பொறுப்பு அமைச்சர்களாக, திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாதவரம், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு வணிகவரித்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களுக்கு கைத்தறித்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு, ஆலந்தூர், அடையாறு மண்டலங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க.விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மண்டல கண்காணிப்பு அதிகாரிகளாக, திருவொற்றியூர் மண்டலத்துக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கே.பாலசுப்பிரமணியம், மணலி மண்டலத்துக்கு தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் பி.குமரவேல் பாண்டியன், மாதவரம் மண்டலத்துக்கு சர்க்கரை இயக்கக கூடுதல் இயக்குநர் எஸ்.அருண்ராஜ், தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு சர்க்கரை துறை ஆணையர் ஆர்.கண்ணன், ராயபுரம் மண்டலத்துக்கு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஆஷா அஜித் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திரு.வி.க.நகருக்கு புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் பி.கணேசன், அம்பத்தூர் மண்டலத்துக்கு தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை சிறப்பு செயலர் கே.விவேகானந்தன், அண்ணாநகர் மண்டலத்துக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் துறை இயக்குநர் பி.காயத்ரி கிருஷ்ணன், தேனாம்பேட்டை மண்டலத்துக்கு நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநர் டி.கிறிஸ்துராஜ், கோடம்பாக்கம் மண்டலத்துக்கு, நில நிர்வாக ஆணையர் எஸ்.கோபால சுந்தர ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர்.

வளசரவாக்கம் மண்டலத்துக்கு தோட்டக்கலைத்துறை இயக்குநர் ஜெ.விஜயராணி, ஆலந்தூர் மண்டலத்துக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன நிர்வாக இயக்குநர் வாகே சங்கேத் பல்வந்த், அடையாறு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் கே.செந்தில் ராஜ், பெருங்குடி மண்டலத்துக்கு கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிகுமார், சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு அருங்காட்சியக இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT