தமிழகம்

மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை நிறுத்த வேண்டும்: அமைச்சர் விஸ்வநாதன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுரை: மேகேதாட்டுவில் அணை கட்​டும் முயற்சியை கர்​நாடக அரசு நிறுத்த வேண்​டும் என உயர் கல்​வித்​துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

அமைச்​ச​ரான பின்​னர், முதல் முறை​யாக நேற்று விஸ்வநாதன் மதுரை வந்​தார். விமான நிலை​யத்​தில் அவருக்கு வரேவற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் நிலைப்​பாடு, கடந்த காலங்​களில் தெளிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

அணை கட்டும் முயற்சியைகர்நாடக மாநில அரசு நிறுத்த வேண்​டும். தமிழக மக்​களுக்கு துரோகம் இழைக்​கக்​கூ​டாது என்​ப​தில் காங்​கிரஸ் அமைச்​சர் என்ற முறை​யில் நானும், முதல்​வரும் தெளி​வாக உள்​ளோம்.

நீட் விவ​காரத்​தில் தமிழகத்​துக்கு விலக்கு அளிக்க வேண்​டும் என்​பதே காங்​கிரஸ் தலை​வர் ராகுலின் நிலைப்​பாடு. கடந்த காலங்​களில் துணைவேந்​தர் நியமனம் உள்​ளிட்ட விஷ​யங்​களில் ஆளுநரின் தலை​யீடு இருந்​தது.

எங்​கள் அரசு ஆளுநருடன் இணக்​க​மான உறவை ஏற்​படுத்​திக் கொண்​டு, கல்​வித்​துறைக்கு தேவை​யானதை செய்​வோம்.

மதுரை காம​ராஜர் பல்​கலைக்​கழகத்​தில் நில​வும் குளறு​படிகள் தீர்க்​கப்​பட்டு தேவை​யான சீர்​திருத்​தங்​கள் செய்​யப்​படும். இவ்​வாறு விஸ்வநாதன் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT