அமைச்சர் விஜய் பாலாஜி

 
தமிழகம்

‘இலவச வேட்டி, சேலைகளை வெளி மாநிலத்தில் வாங்கவில்லை’ - அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

செய்திப்பிரிவு

வேலூர்: தமிழகத்தில் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படுவதாக கூறப்படுவது பொய்யான தகவல் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜய்பாலாஜி, கூறியதாவது, “தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் காதி கிராப்ட் போன்ற அரசு கடைகளுக்கு பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பர செய்ய அரசாங்க பணத்தை எடுத்து கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்தார்கள். இந்தமுறை கொள்கை முடிவாக அரசு பணத்தில் இருந்து விளம்பரங்களை பெரிதாக செய்வது கிடையாது. முதல்வர் வரும்போதுகூட பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லாமல் அரசின் பணத்தை சேமித்து வருகிறோம்.

கடந்த காலத்தில் இல்லாதது போல் இந்த முறை இரண்டு மடங்காக உயர்த்தி தலா ஒரு கோடியே 87 லட்சம் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது என்பது பொய்யான தகவல். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 10 புதிய கடைகளை திறந்துள்ளோம். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கைத்தறி துறையில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிக ஆட்கள் தேவைப்படும் போது புதிதாக ஆட்களை எடுக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கோ-ஆப்டெக்ஸ் கடைகள் மூடப்படுவதாக வரும் புகார்கள் பொய்யானவை. வியாபாரம் இல்லாமல் நஷ்டம் அடைந்த கடைகளைதான் மூடச் சொல்லி, அதற்கு பதிலாக மக்கள் நடமாட்டம் உள்ள வியாபார சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் புதிய கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT