முதுமலையில் ரீல்ஸ் எடுத்த அமைச்சர் வன்னியரசு.

 
தமிழகம்

முதுமலை வனப்பகுதிக்குள் புலியை துரத்தி, துரத்தி ரீல்ஸ் எடுத்த அமைச்சர் வன்னியரசுவால் சர்ச்சை

செய்திப்பிரிவு

முதுமலை: முதுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு புலியைத் துரத்திய ரீல்ஸ் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த 10-ம் தேதி சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்திற்குச் சென்றார். அப்போது, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று விதவிதமாக ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த ரீல்ஸ் நேற்று வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அடர்ந்த வனப்பகுதிக்குள் புலியை விரட்டிச் செல்லும் காட்சியும் அந்த ரீல்ஸில் இடம்பெற்றுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடந்து சென்று ரீல்ஸ் எடுக்க அமைச்சரை வனத்துறை எவ்வாறு அனுமதித்தது என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சாமானிய மக்கள் வனப்பகுதிக்குள் சென்றால் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும் வனத்துறையினர், அமைச்சரைப் புலியை விரட்ட எவ்வாறு அனுமதித்தனர் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT