சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு
சென்னை: “பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது ஆ.ராசாவின் கருத்து” என சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருமாவளவனின் நீண்ட கால கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. ‘அமைப்பாய் திரள்வோம், அங்கீகாரம் பெறுவோம் , அதிகாரம் வெல்வோம்’ என்பது எங்கள் நிலைப்பாடு. விசிகவின் தேர்தல் உத்தியும் இதில் அடங்கியுள்ளது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் விசிகவுக்கான முழக்கம் மட்டுமல்ல; இது பொதுவான முழக்கம். இதை ஏற்றுகொண்டு கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. என்னுடைய செயல்பாடுகள் தவெக அரசுக்கு எப்போதும் பக்கபலமாக தான் இருக்கும். அரசை சிதைக்கின்ற மாதிரி இருக்காது.
அண்ணன் ஆ.ராசாவின் கருத்து, பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது. பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட முன்னணித் தலைவரான அவரது கருத்து அந்த அந்தக் கொள்கைக்கே எதிரானதாக இருக்கிறது” என்று கூறினார்.