அமைச்சர் வன்னியரசு

 
தமிழகம்

கோடம்பாக்கத்தில் சமூக நல மாணவியர் விடுதி நவம்பரில் திறக்கப்படும்: அமைச்சர் வன்னியரசு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோடம்​பாக்​கத்​தில் ரூ.30.83 கோடி மதிப்பீட்டில் கட்​டப்​பட்டு வரும் சமூக நல கல்​லூரி மாண​வியர் விடு​தியை சமூக நீதித் துறை அமைச்​சர் வன்னியரசு நேற்று பார்வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

பின்​னர், செய்​தியாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழக அரசு நிதி​யுத​வி​யுடன் சமூகநீதித் துறை சார்​பில் தாட்கோ மூல​மாக 82,356 சதுரஅடி பரப்​பில் இந்த விடுதி கட்​டப்​பட்டு வரு​கிறது. இங்கு கல்​லூரி மாணவி​கள் 580 பேர் தங்​கிப் பயில முடி​யும். இக்​கட்​டிடம் நவம்​பர் மாத இறுதிக்​குள் பயன்​பாட்​டுக்கு வரும். இந்த விடுதியை முதல்​வர் விஜய் திறந்து வைப்​பார்.

சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்ட வளமிகு வேளாண்மை திட்டத்​தின்​படி விரைவு மின் இணைப்பு வழங்​கும் திட்டத்​தின் கீழ் 1,000 ஆதி​தி​ரா​விட விவ​சா​யிகள் பாசன வசதி, பொருளா​தார மேம்​பாடு அடை​வார்​கள். பழங்​குடி​யின மாணவர்​களுக்கு ‘சிறப்பு கல்வி உதவித் திட்​டம்’ அறி​முகம் செய்​யப்​பட்டுள்​ளது.

இதற்கு தேவை​யான கூடு​தல் செல​வினத்தை முழு​மை​யாக மாநில அரசே ஏற்​றுக்​கொள்​ளும். இதன்​மூலம் பழங்​குடி​யின மாணவர்​களின் மருத்​து​வம், பொறி​யியல் உள்​ளிட்ட உயர்​ கல்​விச் சேர்க்கை உறுதி செய்​யப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

சமூக நீதித் துறை செயலர் சுப்​பையன், தாட்கோ மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ், பழங்​குடி​யினர் நல இயக்​குநர் அண்ணாதுரை மற்​றும் அதி​காரி​கள் பங்கேற்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT