அமைச்சர் ஷாஜகான்

 
தமிழகம்

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது - அமைச்சர் ஷாஜகான் உறுதி

தமிழினி

சென்னை: “தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்,” என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

ஹஜ் பயணம் செய்து திரும்பியவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் இது குறித்து அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவில் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்.

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களை பதிவேற்றம் செய்வதில் பல சவால்கள் உள்ளன. அதிகாரிகள் இயன்றவரை அதில் பதிவேற்றம் செய்துள்ளனர். விடுபட்டவைகள் பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். வக்ப் சட்டத்திருத்தத்தில் பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், செல்வந்​தர்கள், மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் பெருகத் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரால் தானமாக வழங்கப்​பட்டவையே வக்ஃபு சொத்துக்​களாகும். அவை அசையும் சொத்துக்​களாக​வும், அசையாச் சொத்துக்​களாகவும் இருக்​கின்றன. இந்தச் சொத்துக்​களைக் கண்காணிப்​ப​தற்​காக​வும், அதில் தவறு நிகழ்ந்​து​விடக் கூடாது என்பதற்​காக​வும், நாடாளு​மன்​றத்தில் வக்ஃபு சட்டங்களை அரசு 1954இல் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்​களிலும் வக்ஃபு வாரியங்கள் 1958இல் ஏற்படுத்தப்​பட்டன.

இச்சட்டங்கள் பின்னர் 1995இல் விரிவாக்கம் செய்யப்​பட்டு, முழுமைப்​படுத்​தப்​பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்​படையில் அவை நிர்வகிக்​கப்​பட்டும், கண்காணிக்​கப்​பட்டும் வருகின்றன. இந்த நிலையில்​தான், வக்ஃபு வாரியத்தின் நிர்வாகச் செயல்​திறனை மேம்படுத்​திட​வும், வக்ஃபு வாரியம் தொடர்பான பிரச்​சினை​களுக்குத் தீர்வு காணவும் வக்ஃபு சட்டத்தில் திருத்​தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

SCROLL FOR NEXT