தமிழகம்

“என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்” - பிரதமர் வேட்பாளர் குறித்து செங்கோட்டையன் பதில்

செய்திப்பிரிவு

கோவை: தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்​டையன், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​து: “தமிழக முதல்வர் தொலை நோக்கு சிந்தனை​யுடன் 110-வது விதியின்கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகி​றார்.

காவல்​ துறையை பொறுத்தவரை முதல்​வரின் நேரடி கட்டுப்​பாட்டில் உள்ள துறையாகும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, போதைப்​பொருள் தடுப்பு என பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகி​றார். மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், முதல்வர் விஜய் செயல்​படு​கி​றார்.

திமுக, அதிமுக என ஒவ்வொரு கட்சியின் ஆட்சி​யின்​ போதும், தலைமை செயலகத்தை ஒவ்வொரு பக்கம் கொண்டு வர நினைத்​தனர். புதிய தலைமை செயலகத்​துக்கு கோடிக்​கணக்கில் செலவு செய்வது என்றாலும், காலத்தின் தேவை என்பதால் புதிய அலுவலகம் கட்டப்​படு​கிறது.

சட்டப்​பேர​வையில் அனைத்து கேள்வி​களுக்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை” என்று அவர் கூறினார்.

பிரதமர் வேட்பாளராக விஜய் முன் நிறுத்​தப்​படு​கிறாரா என்ற செய்தி​யாளரின் கேள்விக்கு, “எங்களை பொறுத்தவரை முதல்வர் விஜய் தெளிவாக உள்ளார்.

தமிழக மக்கள் விஜய்யை நம்பி வாக்களித்​துள்​ளனர். 2 ஆண்டு காலத்தில் கட்சி தொடங்கி, 2 மாதத்தில் புதிய சின்னம் பெற்று, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி சாதித்​துள்​ளார்.

என்னை பொறுத்தவரை மக்களை காக்கும் பணிகளை முதல்வர் மேற்கொள்​கி​றார். மக்கள் விரும்பும் திட்டங்களை மேற்கொண்டு வருகி​றார். என்னை சிக்கலில் விட்​டு​ வி​டாதீர்​கள்” என்​றார்​.

SCROLL FOR NEXT