மகாராஷ்டிர முழு​வதும் நடைபெறவுள்ள நவராத்திரி விழாக்களில் முஸ்லிம்களுக்கு தடை: விஹெச்​பி அறிவிப்பு

மகாராஷ்டிர முழு​வதும் நடைபெறவுள்ள நவராத்திரி விழாக்களில் முஸ்லிம்களுக்கு தடை: விஹெச்​பி அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் முழு​வதும் நடை​பெறவுள்ள 10 நாள் நவராத்திரி வழி​பாட்டு நிகழ்ச்​சிகள், ‘கர்​பா’ மற்​றும் ‘தாண்டியா’ நடனங்​களில் முஸ்லிம்கள் பங்​கேற்​கத் தடை விதிக்க விஸ்வஹிந்து பரிஷத் (விஹெச்​பி) முடிவு செய்​துள்​ளது.

ராஷ்ட்டிரிய ஸ்வ​யம்​சேவக் சங்​கத்​தின் (ஆர்​எஸ்​எஸ்) தலை​வர் மோகன் பாகவத், நியூ​யார்க்​கில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் உலகளா​விய ஒற்​றுமை குறித்​துப் பேசி ஒரு வாரமே ஆன நிலையில், வலது​சாரி அமைப்​பான விஹெச்பி இந்த அறி​விப்பை வெளியிட்​டுள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது குறித்து விஹெச்பி தேசிய செய்​தித் தொடர்​பாள​ரும் இணைச் செய​லா​ள​ரு​மான ஸ்ரீராஜ் நாயர் கூறிய​தாவது: நவராத்திரி விழா​வில் கர்​பா-​தாண்​டியா நடனங்​களில் முஸ்லிம்கள் பங்​கேற்க அனு​ம​திப்​ப​தில்லை என நாங்​கள் முடிவு செய்​துள்​ளோம். நவராத்​திரி விழா என்​பது வெறும் பாட்​டும் கூத்தும் அல்ல; அது அம்​பாளை வழிபடும் புனித​மான நிகழ்​வு.

உருவ வழி​பாட்டை எதிர்க்​கும் முஸ்​லிம்​கள் இந்த விழா​வில் ஏன் பங்​கேற்க வேண்​டும்?” இருப்​பினும், இந்​தத் தடை எந்​தவொரு சமூகத்​துக்​கும் எதி​ரானது அல்ல. மதமாற்​றம் மற்​றும் கோவதைக்கு எதி​ரான கொள்​கை​களில் விஹெச்பி ஒரு​போதும் சமரசம் செய்​து​கொள்​ளாது.

விழா​வில் பங்​கேற்​பாளர்​களின் ஹிந்து அடை​யாளத்​தைச் சரி​பார்க்க அவர்​களின் அடை​யாள அட்​டைகளைப் (ஆதார்) பரிசோ​திக்க வேண்​டும் என்​றும், நெற்​றி​யில் தில​கம் இடு​வது கட்​டா​யம் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது முஸ்​லிம்​களுக்கோ அல்​லது வேறு எந்​தச் சமூகத்​தினருக்கோ எதி​ரானது அல்ல. முஸ்​லிம்​கள் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்க விரும்​பி​னால், அவர்​கள் தங்​கள் குடும்​பத்​தினருடன் வர வேண்​டும் அல்​லது தங்​கள் வீடு​கள் மற்றும் பள்​ளி​வாசல்​களில் நவராத்​திரி விழாக்​களை நடத்​திக்​ கொள்ளலாம்​. இவ்​வாறு நாயர்​ கூறி​னார்​.

மகாராஷ்டிர முழு​வதும் நடைபெறவுள்ள நவராத்திரி விழாக்களில் முஸ்லிம்களுக்கு தடை: விஹெச்​பி அறிவிப்பு
சத்​தி​யமங்​கலம்: பள்ளி காலை உணவில் விஷப் பவுடர் கலக்கச் சொல்லி மிரட்டியவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in