தமிழகம்

குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற இபிஎஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: ஜெய​ராஜ் - பென்​னிக்ஸ் கொலை வழக்​கில் பொய் சொல்லி குற்​ற​வாளி​களை காப்​பாற்ற முயன்ற பழனி​சாமி, பகிரங்க மன்​னிப்பு கேட்க வேண்​டும் என்று அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சாத்​தான்​குளம் தந்தை ஜெய​ராஜ் - மகன் பென்​னிக்ஸ் கொலை வழக்​கில் 9 போலீ​ஸாரும் குற்​ற​வாளி​கள் என 6 ஆண்​டு​களுக்கு பிறகு மதுரை கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​திருக்​கிறது.

          

சாத்​தான்​குளம் சம்​பவத்தை இரட்டை படு​கொலை என்று விமர்​சித்த அன்​றைய எதிர்க்​கட்​சித் தலை​வர் மு.க.ஸ்​டா​லின், காவல்​துறை​யினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்​டும் என்று தொடர் அழுத்​தம் கொடுத்​தார்.

பென்​னிக்ஸ் குடும்​பத்​தினருக்கு திமுக சார்​பில் ரூ. 25 லட்​சம் நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. இத்​தனைக்​கும் ஜெய​ராஜ், பென்​னிக்ஸ் குற்​ற​வாளி​கள் அல்ல. கரோனா ஊரடங்கு நேரத்​தில் விதியை மீறி கடையை திறந்து வைத்​திருந்​தார்​கள் என்​பது​தான் அவர்​கள் மீதான காவல் துறை​யின் குற்​றச்​சாட்​டு.

மூச்​சுக்கு முந்​நூறு தடவை, கரோனா காலத்​தி​லும் சிறப்​பான ஆட்​சியை கொடுத்​தோம் என சொல்​லும் பழனி​சாமி, அந்த கரோனா காலத்​தில்​தான் ஜெய​ராஜ், பென்​னிக்ஸ் உயிர்​கள் அநி​யாய​மாக பறிக்​கப்​பட்​டன.

கரோனா காலத்​தில் பழனி​சாமி​யின் சிறப்​பான ஆட்​சிக்கு சாத்​தான்​குளமே சாட்​சி. காவல்​துறை​யின​ரால் பிடித்​துச் செல்​லப்​பட்ட இரு​வரும், காவல் நிலைய விசா​ரணைக்கு பிறகு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

ஆனால், சில மணி நேரத்​தில் இரு​வருமே அடுத்​தடுத்து இறந்து போக, மூச்​சுத்​திணறல், உடல்நல குறைவு என்று வழக்​க​மான காரணத்தை சொல்லி கதையை முடிக்க பார்த்​தது அன்​றைக்கு ஆட்​சி​யில் இருந்த பழனி​சாமி அரசு. முதல்​வரே பொய் சொல்லி காவல் துறை​யினரை காப்​பாற்​றி​னார்.

பாதிக்​கப்​பட்ட ஜெய​ராஜ், பென்​னிக்ஸ் ஆகிய இரண்டு அப்​பாவி​களை நோயாளி ஆக்​கிய மனசாட்சி இல்​லாத மனிதர்​தான் பழனி​சாமி. சாத்​தான்​குளம் கொடூர கொலை சம்​பவத்​தில் இன்​றைக்கு நீதி நிலை​நாட்​டப்​பட்​டுள்​ளது.

அதி​முக ஆட்​சி​யில் மூடி மறைக்க நினைத்த வழக்​கில் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​ததன் மூலம் மூச்​சுத்​திணறல், உடல்நல குறை​வால்​தான் உயி​ரிழந்​தனர் என பழனி​சாமி சொன்ன பொய்யை வெட்ட வெளிச்​ச​மாக்கி விட்​டது.

குற்​ற​வாளி​களை காப்​பாற்ற அன்று பொய் சொன்ன பழனி​சாமி​யும், ஒரு​வகை​யில் குற்​ற​வாளி​தான். பொய் சொல்லி குற்​ற​வாளி​களை காப்​பாற்ற முயன்ற பழனி​சாமி பகிரங்க மன்​னிப்பு கேட்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT