சென்னை: ஏமாற்றி காரை ரூ.7 லட்சத்துக்கு விற்று விட்டதால் ஆத்திரம்: வியாபாரியை கடத்தி தாக்கிய இளைஞர் கைது

சென்னை: ஏமாற்றி காரை ரூ.7 லட்சத்துக்கு விற்று விட்டதால் ஆத்திரம்: வியாபாரியை கடத்தி தாக்கிய இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: முகப்​பேர், ரெட்​டிப்​பாளை​யத்தில் வசித்து வருபவர் சரவணன் (54). பழைய கார்​களை விற்பனை செய்து வரு​கிறார். கடந்த 21-ம் தேதி மதி​யம் இவர், தனது மகனுடன் முகப்​பேர் பகு​தி​யில் உள்ள ஒரு ஓட்​டலுக்கு சாப்​பிட சென்​றார்.

அப்​போது, அங்கு காரில் வந்த கும்​பல் ஒன்​று, சரவணன் மற்​றும் அவரது மகனை சரமாரி​யாக தாக்​கியது. பின்​னர், சரவணனை மட்​டும் காரில் கடத்​திச் சென்​றது.

அவரை முகப்​பேர் கிழக்​கில், கோல்​டன் ஜார்ஜ் நகர் அருகே வீடு ஒன்​றில் அடைத்து வைத்​தது. இதற்​கிடையே, இந்த கடத்​தல் விவ​காரம் தொடர்​பாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலை​யத்​தில் சரவணன் குடும்​பத்​தினர் புகார் அளித்​தனர்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். பின்​னர், இருப்​பிடத்​தை கண்​டறிந்து சரவணனை மீட்​டனர். கடத்​தலில் ஈடுபட்ட திரு​வள்​ளூர் மாவட்​டம், ஊத்​துக்​கோட்​டை, வட மதுரையைச் சேர்ந்த மணி​கண்​டன் (29) என்​பவரை போலீ​ஸார் கைது செய்தனர். தலைமறை​வாக உள்ள அவரது கூட்​டாளி​களை தேடி வரு​கின்​றனர்.

கைது செய்​யப்​பட்ட மணி​கண்​டன், சரவணனிடம் ரூ.7 லட்​சத்​துக்கு பழைய கார் ஒன்றை வாங்கி உள்​ளார். இந்த காரை திரு​வள்​ளூர் ஆர்​டிஓ அலு​வலக அதி​காரி​கள் இரு தினங்​களுக்கு முன்​னர் பறி​முதல் செய்​தனர்.

இதனால், சரவணன் தன்னை ஏமாற்றி அவரது காரை விற்​பனை செய்துவிட்​ட​தாக மணி​கண்​டன் கோபத்​தில் இருந்​துள்​ளார். மேலும், காருக்​காக கொடுத்த பணத்தையும் கொடுக்காததால், கூட்​டாளி​களு​டன் சேர்ந்து கடத்​தலில்​ ஈடு​பட்​டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை: ஏமாற்றி காரை ரூ.7 லட்சத்துக்கு விற்று விட்டதால் ஆத்திரம்: வியாபாரியை கடத்தி தாக்கிய இளைஞர் கைது
தேர்தலில் பயன்படுத்தப்படும் இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தொகுதிவாரியாக பிரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in