அமைச்சர் ராஜகண்ணப்பன் | கோப்புப்படம்

 
தமிழகம்

“காங்கிரசில் இருந்து கொண்டு சிலர் உயிரை வாங்குகிறார்கள்” - ராஜகண்ணப்பன் ரணகளப் பேச்சு

செய்திப்பிரிவு

ஒரு சிலர் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து கொண்டு உயிரை வாங்​கு​வ​தாக அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​தார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி அருகே உள்ள கீரமங்​கலத்​தில் நேற்று முன்​தினம் இரவு திமுக பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் அமைச்​சர் ராஜகண்​ணப்​பன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: நான் வகிக்​கும் வனத்​துறை​யில் 108 பேர் ஐஎஃப்​எஸ் அதி​காரி​கள் உள்​ளனர். அவர்​களை மேய்ப்​பதே பெரிய சிக்​கலாக உள்​ளது. பதவி உயர்வு கொடுத்து சிலரை மாவட்ட வன அலு​வலர்​களாக நியமித்​து, ஒரு மாதிரி ஓட்​டிக்​கொண்டு இருக்​கிறேன்.

          

திரா​விட இயக்​கத்தை வெல்ல இனிமேல் ஒரு​வன் பிறந்து தான் வர வேண்​டும். 1967 வரை காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்​தது. அப்​புறம் அவர்​களால் வர முடிந்​த​தா? கருணாநிதி 110 இடங்​களில் வென்​றார். அப்​போது, அவர் என்ன கூட்​டணி ஆட்சி கொடுத்​தா​ரா? காங்​கிரஸ்​காரர்​கள் நம்​மோடு இருந்​தால் இருந்​து​விட்​டுப் போகட்​டும்​... வேண்​டாம் என்று சொல்​ல​வில்​லை. சொன்​னால் கோபித்​துக் கொள்​வார்​கள். காங்​கிரஸ் கட்​சி​யில் ஒருசிலர் இருந்து கொண்டு உயிரை வாங்​கு​கி​றார்​கள்.

நேற்​றுக்​கூட நானும் செல்​வப்​பெருந்​தகை​யும் ஒரு நிகழ்ச்​சி​யில் சந்​தித்​துக் கொண்​டோம். என்ன செய்​வது, கூட்​ட​ணி​யில் இருக்​கி​றார்​கள் என்​ப​தற்​காக போட்​டோவுக்கு போஸ் கொடுக்​கி​றோம். எந்த கூட்​டணி என்​றாலும் சரி​தான். முதல்​வர் ஸ்டா​லின் சொல்​வதை கேட்​பது தான் நம் கொள்​கை. தனி​யாக நிற்க வேண்​டும் என்​றாலும் ரெடி.

தேர்​தல் வந்து என்ன கெட்​டுப் போய் விட்​டோம். மக்​களவை உறுப்​பின​ராக ப.சிதம்​பரம் வெற்றி பெற்​றதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்கு என்​னானது என்று முதல்​வர் ஒரு முறை என்​னிடம் கேட்​டார். நீங்​கள் தான் நிறுத்தி வைக்​கச் சொன்​னீர்​கள்; நிறுத்தி வைத்து விட்​டேன் என்​றேன். அதைக்​கூட அவர் மறந்​து​விட்​டார். என்ன செய்​வது? கூட்​ட​ணி​யில் இருக்​கி​றார்​கள். ப.சிதம்​பர​மும் தற்​போது நண்​ப​ராகி விட்​டார். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT