தமிழகம்

சென்னைக்குள் புதிய தலைமைச்செயலகம்; சாத்தியக்கூறு உள்ள இடம் குறித்து ஆய்வு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘​சாத்​தி​யக்​கூறு உள்ள இடம் குறித்து ஆய்வு செய்​து, சென்​னைக்​குள் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கப்​படும்’ என மின்​சா​ரம் மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு டாக்​டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக்​கழகம் சார்​பில் மாநில அளவி​லான சட்​டக் கல்​லூரி​களுக்கு இடையி​லான தடகளப் போட்​டியை சென்னை நேரு விளை​யாட்டு அரங்​கில் மின்​சா​ரம் மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல் குமார் நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் பல்​கலை துணைவேந்​தர் குழுத் தலை​வர் நீதி​யரசர் பார​தி​தாசன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர். முன்​ன​தாக அனைத்து மாவட்​டங்​களைச் சேர்ந்த கல்​லூரி மாணவர்​களின் அணிவகுப்பு நடை​பெற்​றது.

இந்​நிகழ்ச்​சிக்கு பிறகு செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: சட்​டக் கல்​லூரி​கள் மற்​றும் பல்​கலைக்​கழகங்​களில் நீண்​ட​கால​மாக பட்​டமளிப்பு விழாக்​கள் நடை​பெறாமல் உள்​ளன.

கல்​வி​யின் தரத்தை உயர்த்​த​வும், பல்​கலைக்​கழகங்​களை சிறப்​பாக செயல்​படுத்​த​வும் நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். அதே​போல், துணைவேந்​தரை நியமனம் செய்​யும் அதி​காரம் மாநில அரசிடம் இல்​லாத நிலை​யில், அதற்​கான சட்​டரீ​தி​யான நடவடிக்​கையை எடுக்க உள்​ளோம்.

புதிய தலைமைச்செயலகம் வேண்​டும் என்​பது 40 வருட கோரிக்​கை​யாகும். அதற்​காக மீனவர்​களுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் வகை​யில் அரசு முடிவு எடுக்​காது. சென்​னை​யில்​தான் அனைத்து துறை​சார்ந்த தலை​மையகங்​கள் உள்​ளன. நகரத்​துக்கு வெளியே 40 கி.மீ தொலை​வில் அமைக்க முடி​யாது.

சென்​னைக்​குள் சாத்​தி​யக்​கூறு இருக்​கும் இடங்​களில் புதிய தலை​மைசெயல​கத்தை அமைப்​பது குறித்து ஆய்வு மேற்​கொள்​ளப்​படும். முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி உட்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு கடிதம் அனுப்​பப்​பட்டு இது​வரை ஒப்​புதல் வழங்​கப்​ப​டாதது ஆச்​சரியமளிக்​கிறது.

இதில், திமுகவைக் காப்​பாற்ற பாஜக மறை​முக​மாக செயல்​படு​கிறதா என்​பது தெரிய​வில்​லை. இடைத்​தேர்​தலில் தவெக​வுக்கு எந்த பின்​னடை​வும் இல்​லை. தனது சுயநலத்​தால் அதி​முகவை பழனி​சாமி அழித்​து​விட்​டார்.

அவரது தலைமை மீதான அதிருப்​தி​யில் வெளியே வந்த வேட்​பாளர்​கள் நிச்​ச​யம் வெற்றி பெறு​வார்​கள். மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் அறங்​காவலர் விவ​காரத்​துக்​கும் எனக்​கும் சம்​பந்​தமில்​லை.

கோயில் விவ​காரத்​தில் என்​னுடைய தலை​யீடு ஏது​மில்​லை. முன்​னாள் அமைச்​சர் பி.டி.ஆர்​.பழனிவேல் தியாக​ராஜனின் தாயாருக்கு உரிய மரி​யாதை செய்து அவரை அழைத்து அமர வைத்து அனைத்​தை​யும் செய்து கொடுத்​தோம். தனிப்​பட்ட ஈகோ​வால் பழனிவேல் தியாக​ராஜன் குற்​றம்​சாட்​டு​கிறார். இவ்​வாறு அமைச்​சர் கூறி​னார்.

SCROLL FOR NEXT