ஆசிய விளையாட்டு போட்டி: 4X400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றது இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டி: 4X400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றது இந்திய அணி
Updated on: 
1 min read

நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் பூவம்மா ராஜூ, விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ், டி.எஸ்.மானு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:14.46 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஹாங்சோவில் கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டிலும் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. இறுதிப் பகுதியில் வித்யா ராம்ராஜ் சிறப்பாக செயல்பட்டதே இந்தியாவின் வெள்ளிப் பதக்கத்துக்கு வழிவகுத்தது.

பக்ரைன் அணி 3:12.87 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், வியட்நாம் அணி (3:14.54) 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றன. வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆசிய விளையாட்டு போட்டி: 4X400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றது இந்திய அணி
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்றே ஊதியம் வழங்க ஏற்பாடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in