தமிழகம்

திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: ​திமுக ஆட்​சி​யில் விவ​சா​யிகள் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறார்​கள். அதே​நேரம், கடந்த அதிமுக ஆட்​சி​யில் 102 விவ​சா​யிகள் தற்​கொலை செய்​து​கொண்​டனர் என்று சட்​டப்​பேர​வை​யில் வேளாண்​துறை அமைச்​சர் எம்​ஆர்கே பன்​னீர்​செல்​வம் கூறி​னார். சட்​டப்​பேர​வை​யில் வேளாண் இடைக்​கால பட்​ஜெட் மீதான விவாதத்​தில் உறுப்​பினர்​கள் பேசினர்.

அதற்கு அமைச்​சர் எம்​ஆர்கே பன்​னீர்​செல்​வம் நேற்று பதிலளித்​துப் பேசி​ய​தாவது: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்​சி​யில் விவ​சா​யிகள் தங்​கள் கோரிக்​கைகளுக்​காக தின​மும் போராட வேண்​டி​யிருந்​தது. அவர்​களுக்கு எந்த நிவாரண​மும் கிடைக்​க​வில்​லை. ஆனால், ஐந்​தாண்டு கால திமுக ஆட்​சி​யில் விவ​சா​யிகள் எல்​லோரும் மகிழ்ச்​சி​யாக உள்​ளனர்.

          

கடந்த 2021-2022 முதல் வேளாண் துறைக்​கென தனி பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்டு வரு​கிறது. இது விவ​சா​யிகளின் வரவேற்பை பெற்​றுள்​ளது. கடந்த ஐந்​தாண்​டில் வேளாண்​துறைக்கு ஒரு லட்​சத்து 94 ஆயிரத்து 76 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் ரூ.47,248 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த அதிமுக ஆட்​சிக்​காலத்​தில் 102 விவ​சா​யிகள் தற்​கொலை செய்​து​கொண்​டனர். ஆனால் ஐந்​தாண்டு கால திமுக ஆட்​சி​யில் அது​ போன்ற தற்​கொலை சம்​பவம் நிகழ்ந்​தது இல்​லை. விவ​சா​யிகளுக்கு ஏற்​படு​கின்ற பிரச்​சினை​கள் அதாவது இயற்கை இடர்​பாடு​களுக்கு எல்​லாம் உடனடி​யாக நிவாரணம் வழங்​கப்​படு​கிறது. முதல்​வரே நேரடி​யாக கள ஆய்வு செய்​கிறார்.

அனைத்து கிராம ஒருங்​கிணைந்த வேளாண் வளர்ச்​சித் திட்​டம், முதல்​வரின் மண்​ணு​யிர் காத்து மன்​னு​யிர் காப்​போம் திட்​டம், டெல்டா அல்​லாத மாவட்​டங்​களில் கார், குறு​வை, சொர்​ண​வாரி பரு​வங்​களின் நெல் சாகுபடிக்​கான சிறப்பு தொகுப்​புத் திட்​டம், நெல் ஜெய​ராமன் மரபு​சார் நெல் ரகங்​கள் பாது​காப்​புத் திட்​டம், குறுவை பரு​வத்​தில் மாற்​றுப்​ப​யிர்சாகுபடி சிறப்பு தொகுப்​பு, இளைஞர்​களை வேளாண் தொழில் முனை​வோ​ராக்​குதல் திட்​டம், தமிழ்​நாடு சிறு​தானிய இயக்​கம், மலை​வாழ் உழவர் முன்​னேற்​றத்திட்​டம், தமிழ்​நாடு உயிர்ம வேளாண்மை இயக்​கம், பனை மேம்​பாட்டு இயக்​கம், முதல்​வரின் உழவர் நல சேவை மையங்​கள் என வேளாண் துறை​யில் பல்​வேறு புதிய திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

15 புதிய உழவர் சந்​தைகள் அமைக்​கப்​பட்​டதுடன், 100 மதிப்​புக்கூட்​டும் மையங்​கள், சிறந்த உயிர்ம வேளாண்மை உழவருக்​கான ‘நம்​மாழ்​வார் விருது’, உழவர் அலு​வலர் தொடர்பு திட்​டம், வேளாண் கல்​வி​யில் தமிழ் பயிற்​றுமொழி மற்​றும் மாணவர் சேர்க்​கை, 3 புதிய அரசு வேளாண்​மைக் கல்​லூரி​கள் மற்​றும் ஒரு தோட்​டக் கலைக் கல்​லூரி, பலா இயக்​கம், முருங்கை இயக்​கம், வெங்​காய சாகுபடி இயக்​கம், மிள​காய் மண்​டலம், கறிவேப்​பிலை தொகுப்​பு, முக்​கனி மேம்​பாட்​டுத் திட்​டம், அதே​போல மா ஏற்​றும​திக்​கான முனைப்​பு​கள், புதிய பூங்​காக்​கள் உரு​வாக்​கம், மின்​னணு பயிர் சாகுபடி பரப்​புக் கணக்​கீடு, விதைப்பு முதல் அறு​வடை வரை இயந்​திரமைய​மாக்​குதல், உழவர் அங்​காடிகள், டாக்​டர் எம்​.எஸ். சுவாமி​நாதன் ஆராய்ச்சி நிதி, மேலும், குறுவை தொகுப்பு திட்​டம் என திட்​டங்​களை சொல்​லிக்​கொண்டே போகலாம்.

மேட்​டூர் அணை உரிய காலத்​தில் திறக்​கப்​படு​கிறது. குறுவை தொகுப்​புக்கு ரூ.482 கோடி நிதியை வழங்​கி, அதன் மூல​மாக 19 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெற்​றுள்​ளனர். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT