சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் அருர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் பேசும்போது, ‘‘சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை, ஏன் கூட்டத் தொடருக்கு முன்பாகவே வெளியிட வேண்டும். சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கலாமே’’ என்றார்.
இதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தின் தற்போதைய நிலை மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாகவே முதல்வர் வெளியிட சொன்னார்.
அவரின்உத்தரவின்படியே, வெள்ளை அறிக்கையை வெளியிட்டோம். கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில், அதற்கு முந்தைய 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட அதிமாக கடன் வாங்கப்பட்டுள்ளது.
இன்று தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளது. இது மிகத்தெளிவாக மக்களிடம் சேர வேண்டும் என்பதற்காகவே வெளியிடப்பட்டது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.