தமிழகம்

மம்தா கேள்வி எழுப்பியதால்தான் தலைமை செயலாளர் மாற்றம்: அமைச்சர் கே.என்.நேரு புது விளக்கம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தமிழகத்​தில் எந்த அதி​காரியை​யும் மாற்​றாமல், மேற்கு வங்​கத்​தில் மட்​டும் ஏன் மாற்​றுகிறீர்​கள் என அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி கேட்​ட​தால் தான், தமிழக தலை​மைச் செய​லா​ளரை தேர்​தல் ஆணை​யம் மாற்றி உள்​ளது என அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​தார்.

தஞ்​சாவூரில் இன்று (மார்ச் 10) முதல்​வர் மு.க. ஸ்டா​லின் தேர்​தல் பிர​சா​ரத்​துக்கு வருகை தரவுள்​ள​தால், தஞ்​சாவூர் தில​கர் திடலில் மேடை அமைக்​கும் பணியை அமைச்​சர் கே.என்​. நேரு நேற்று பார்​வை​யிட்​டார்.

          

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: 2021 தேர்​தலில் டெல்​டா​வில் உள்ள 41 தொகு​தி​களில் 4 தொகு​தி​களை தவிர, மற்ற அனைத்து தொகு​திகளி​லும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறை அனைத்து தொகு​தி​யிலும் வெற்றி பெறு​வதற்​கான ஏற்பாடு​களை செய்து வரு​கிறோம்.

தவெக தலை​வர் விஜய் எவ்​வளவு வாக்கு வாங்​கு​வார் என எனக்கு தெரி​யாது. அவர் எந்த வாக்கை பிரித்​தா​லும், திமுக வெற்றி பெறு​வது உறு​தி. பழனி​சாமிக்கு பேசுவதற்கு விஷ​யம் எது​வும் இல்​லாத​தால், வாய்க்கு வந்​த​படி பேசுகிறார்.

மேற்கு வங்​கத்​தில் மட்டும் அதி​காரி​களை மாற்றுகிறீர்​கள், தமிழகத்​தில் ஏன் எந்த அதிகாரியை​யும்மாற்​றுவது இல்லை என அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி கேட்​ட​தால்தான், தமிழக தலை​மைச் செய​லா​ளரைமாற்றி உள்​ளனர்.

தேர்​தல் முடிந்​ததும் அவர்​கள் திரும்பி வரப் போகிறார்​கள். அதி​முக, பாஜவுடன் தவெக தலை​வர் விஜய் மறை​முகத் தொடர்​பில் உள்​ளார். திமுக மட்​டும்தான் அவருக்கு எதிரி. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT