தமிழகம்

மாணவர்களுடன் காலை உணவருந்தி உணவின் தரத்தை சோதித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

செய்திப்பிரிவு

சென்னை: மாநக​ராட்சி பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவு திட்​டத்​தில் வழங்​கப்​படும் உணவின் தரத்​தை, சமூகநலத்​துறை அமைச்​சர் கு.ஜெகதீஸ்​வரி குழந்​தைகளு​டன் அமர்ந்து உணவருந்தி நேற்று ஆய்வு செய்​தார். சென்னை மாநக​ராட்​சி​ ​பள்​ளி​கள், கோடை விடு​முறை முடிந்து நேற்று திறக்​கப்​பட்​டன. மாணவர்​கள் உற்​சாக​மாக பள்​ளிக்கு வந்​தனர்.

இதனிடையே, சமூகநலன் மற்​றும் மகளிர் உரிமைத்​துறை அமைச்​சர் கு.ஜெகதீஸ்​வரி, அமைந்​தகரை​யில் உள்ள மாநக​ராட்சி நடுநிலைப்​பள்​ளி, செனாய் நகர், சுப்​ப​ராயன் தெரு​வில் உள்ள மேல்​நிலைப் பள்​ளி​களில் நேற்று திடீர் ஆய்வு மேற்​கொண்​டு, நடப்பு கல்​வி​யாண்​டில் பள்​ளிக்கு முதல் நாளாக வருகை தந்த பள்ளி மாணவ, மாண​வியருக்கு இனிப்​பு​களை வழங்​கி​னார்.

பின்​னர், அவர்​களு​டன் கலந்​துரை​யாடி, முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும் உணவை மாணவர்​களுக்கு வழங்கி அதன் தரத்தை ஆய்வு செய்​வதற்​காக, அவரும் மாணவர்களு​டன் அமர்ந்து காலை உணவருந்​தி​னார்.

தொடர்ந்​து, காலை உணவுத் திட்​டத்​தில் வழங்​கப்​படும் உணவு வகைகளை தரமாக​வும், சுவை​யாக​வும், சுத்​த​மாக​வும் மாணவர்​களுக்கு வழங்க வேண்​டும் என அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

அதனைத் தொடர்ந்​து, முதல்​வரின் காலை உணவுத் திட்​டத்​துக்கு பயன்​படுத்​தப்​படும் உணவுப் பொருட்​களின் தரம், எடை, பாது​காப்​பாக இருப்பு வைத்​தல் குறித்து ஆய்வு செய்​து, இருப்பு பதிவேடு​களை ஒப்​பிட்டு பார்த்​தார்.

இதனைத் தொடர்ந்​து, மாணவர்​களுக்கு பாடப் புத்​தகங்​கள், சீருடைகள், நோட்​டுப் புத்​தகங்​கள், காலணி​கள், புத்​தகப்பை உள்​ளிட்ட கல்வி உபகரணங்​களை அமைச்​சர் ஜெகதீஸ்​வரி வழங்​கி​னார்.

ஆய்​வு​களின்​போது, சமூக நலன் மற்​றும் மகளிர் உரிமைத்​துறை செயலர் எம்​.மரி​யம் பல்​லவி பல்​தேவ், இயக்​குநர் ஐ.எஸ்​.மெர்​சி ரம்​யா உள்​ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT