தமிழகம்

பாடத்திட்டம் உருவாக்குவதில் தொழில்துறையினர் பங்கேற்க வேண்டும்: உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​பாடத்திட்டம் உரு​வாக்​கு​வ​தில் தொழில்​துறை​யினர் பங்​கேற்க வேண்​டும் என்று உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் வலி​யுறுத்​தி​னார்.

இந்​திய தொழில்​கூட்​டமைப்பு (சிஐஐ) சார்​பில் கல்​வி-தொழில்​நுட்​பம் தொடர்​பான 3 நாள் கண்​காட்சி சென்னை நந்​தம்​பாக்​கம் வர்த்தக மையத்​தில் நேற்று தொடங்​கியது.

இக்​கண்​காட்​சியை உயர்​கல்வி அமைச்​சர் விஸ்​வ​நாதன் தொடங்கி வைத்து பேசி​ய​தாவது: கல்​வியை​யும் தொழில்​நுட்​பத்​தை​யும் தனித்​தனியே பார்க்க முடி​யாது. ஏஐ எனப்​படும் செயற்கை நுண்​ணறி​வு, நேரடி அனுபவ கற்​றல், தரவு​களை அடிப்​படை​யாகக் கொண்ட கல்வி ஆகியன மாணவர்​களை வேலை​வாய்ப்​புக்கு தயார்​படுத்​தும் முறை​களை மாற்​றத் தொடங்​கி​விட்​டன.

அந்த வகை​யில், தொழில்​துறைக்​கும் உயர்​கல்​வித் துறைக்​கும் இடையி​லான உறவு இது​வரை இல்​லாத அளவுக்கு வளர்ந்​துள்​ளது. தமிழகத்​தில் உயர்​கல்வி செல்​வோரின் விகிதம் 52.3 சதவீத​மாக இருக்​கிறது.

பெண்​களின் சேர்க்கை விகிதம் 53.1 சதவீத​மாக உள்​ளது. தமிழகத்​தில் 13 அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் 9 தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் உள்​ளன. அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் 441 பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் ஏறத்​தாழ 8 லட்​சம் மாணவர்​கள் பயின்று வரு​கின்​றனர்.

கல்வி நிறு​வனங்​களும் தொழில்​துறை​யினரும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்​டும். பாடத்​திட்​டத்தை உரு​வாக்​கு​வ​தில் தொழில்​துறை​யினர் பங்​கேற்க வேண்​டும். தொழில்​துறை நிபுணர்​கள் கல்​லூரி​களுக்கு கவுரவ ஆசிரியர்​களாக வருகை தந்து பாடம் நடத்த வேண்​டும்.

தொழில்​துறை புராஜெக்ட்​களில் பங்​கேற்க மாணவர்​கள் அனு​ம​திக்​கப்பட வேண்​டும். இன்​டன்​ஷிப், அப்​ரன்​டீஸ் வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கப்பட வேண்​டும். உயர்​கல்​வி​யின் தரத்தை மேம்​படுத்​தும் வகை​யில் சர்​வ​தேச பல்​கலைக்​கழகங்​களு​டன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாக வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறுகை​யில், “பல்​கலைக்​கழகங்​களில் துணைவேந்​தர் நியமனம் தொடர்​பான வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில்

நிலு​வை​யில் உள்​ளன. எனவே அதுகுறித்து தற்​போது விரி​வாக விவா​திக்க முடி​யாது.

துணைவேந்​தர் இல்​லாத பல்​கலைக்​கழகங்​களில், ஒருங்​கிணைப்​புக்​குழு மூலம் இடைக்​கால நிர்​வாக ஏற்​பாடு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. ஒவ்​வொரு பல்​கலைக்​கழகத்​தி​லும் சிண்​டிகேட் உறுப்​பினர்​கள் கூடி, மூத்த பேராசிரியர்​கள் அடங்​கிய குழுவை உரு​வாக்​கி, அதிலிருந்து ஒரு மூத்த பேராசிரியரை தேர்வு செய்​து, துணைவேந்​தருக்​குரிய அதி​காரங்​களு​டன் செயல்​படும் வகை​யில் நியமனம் செய்​வதற்​கான நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

நெல்லை மனோன்​மணியம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழகம், காரைக்​குடி அழகப்பா பல்​கலைக்​கழகத்​தில் இந்த நடை​முறை மூலம் பொறுப்பு துணைவேந்​தர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். 11 பல்​கலைக்​கழகங்​களில் பொறுப்பு துணைவேந்​தர்​கள் விரை​வில் நியமனம் செய்​யப்பட உள்​ளனர்" என்​றார்.

SCROLL FOR NEXT