தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங். ஆர்ப்பாட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங். ஆர்ப்பாட்டம்
Updated on: 
1 min read

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: இந்​திய ஜனநாயகத்​தைப் பாது​காக்​கும் பொறுப்​பில் உள்ள தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், மத்​திய அரசினுடைய, குறிப்​பாக உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் ஏஜென்ட்​டாகச் செயல்​பட்டு வரு​கிறார்.

இதைக் கண்​டிக்​கும் வகை​யிலும், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் உடனடி​யாகப் பதவி விலக வலி​யுறுத்​தி, காங்​கிரஸ் கட்சி சார்​பில் சென்​னை​யில் மாநில அளவி​லான ஆர்ப்​பாட்​ட​மும், அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்​டத் தலைநகரங்​களி​லும் ஆட்​சி​யர் அலு​வல​கங்​கள் முன்​பாகக் கண்​டனப் போராட்​டங்​கள் நடை​பெறும்.

டெல்​லி​யில் செப்​டம்​பர் 29 அன்று நடை​பெற​விருக்​கும் காங்​கிரஸ் காரியக் கமிட்டி கூட்​டத்​திற்​குப் பிறகு, இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​களு​டன் கலந்​தாலோ​சித்து அடுத்​தகட்​டத் தேசிய அளவி​லான போராட்​டங்​கள் முடிவு செய்​யப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங். ஆர்ப்பாட்டம்
டெங்கு குறித்து பாடம் எடுக்க வேண்டாம்: பழனிசாமிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in