தமிழக சட்டப்பேரவையில் நேற்று மேட்டூர் அணை திறப்பு குறித்து அதிமுக உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்து பேசியதாவது:
தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கடந்த ஜூலை 29 முதல் ஆக. 18-ம் தேதி வரை 14 டிஎம்சி காவிரியில் தண்ணீர் கிடைத்துள்ளது.
மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி ஆக. 26-ம் தேதி வரை சுமார் 9 டிஎம்சி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்த பிறகு, மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு, தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.