தமிழகம்

போராட்டத்தைக் கைவிட்டு இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுப்புக்கு பின்னர் ஜன.5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது.

12-வது நாளான நேற்று ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடு களைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது.

தேர்வு நேரம் நெருங்குவதால் மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பள்ளிக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து, அவர்கள் தங்களது வழக்கமான கற்றல், கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். பள்ளி நேரம் முடிந்ததும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம். ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்றார்.

SCROLL FOR NEXT