ஈரோட்டில் வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நேற்று தொடங்கி வைத்தபின் சேலை ரகங்களை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

 
தமிழகம்

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கூடுதல் துணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய அமைச்சர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

ஈரோடு: சென்​னிமலை பகு​தி​யில் தேக்​கமடைந்​துள்ள துணி இருப்​பு​களை அகற்​றும் வகை​யில் தொடக்​கநிலை நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களிடம் இருந்து கூடு​தல் துணி​களை கொள்​முதல் செய்​யு​மாறு கோ-ஆப் டெக்ஸ் நிர்​வாகத்​துக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ள​தாக கைத்​தறித் துறை அமைச்​சர் விஜய் பாலாஜி தெரி​வித்​தார்.

ஈரோடு காந்​திஜி சாலை​யில் அமைந்​துள்ள வசந்​தம் கோ-ஆப் டெக்ஸ் விற்​பனை நிலை​யத்​தில், தீபாவளியையொட்டி 30 சதவீதம் தள்​ளு​படி விற்​பனையை அமைச்​சர் விஜய்​பாலாஜி தொடங்கி வைத்​தார். ஈரோடு ஆட்​சி​யர் கந்​த​சாமி தலைமை வகித்​தார். எம்​எல்​ஏக்​கள் ஆனந்த்​மோகன், சண்​முகன் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

நிகழ்ச்​சிக்​குப்​பின் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: பொது​மக்​கள் குறைந்த விலை​யில் ஆடைகளை வாங்​கும் வகை​யில் பவர்​லூம் துணி​களின் விற்​பனையை அதி​கரிக்​க​வும் கோ-ஆப்​டெக்ஸ் விற்​பனை நிலை​யங்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

சென்​னிமலை​யில் தேக்​கமடைந்​துள்ள துணி இருப்​பு​களை அகற்​றும் வகை​யில், தொடக்​கநிலை நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களிடம் இருந்து கூடு​தல் துணி​களை கொள்​முதல் செய்​யு​மாறு கோ-ஆப்​டெக்ஸ் நிர்​வாகத்​துக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் தவெக ஆட்சி அமைந்த பின்​னர் தமிழகத்​தில் 10 புதிய கோ-ஆப்​டெக்ஸ் விற்​பனை நிலை​யங்​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. நடப்​பாண்டு கோ-ஆப்​டெக்ஸ் விற்​பனை நிலை​யங்​களில் புதிய லினன் ரக துணி​கள், கோரா பட்டு சேலைகள் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளன.

கரூர் ஜவுளிப் பூங்​கா​வில் ஏற்​றும​திக்​காக வீட்டு உபயோகத்​துக்​கான 1,000-க்​கும் மேற்​பட்ட வகை​யான ஜவுளிப் பொருட்​கள் உற்​பத்தி செய்​யப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT