தமிழகம்

சாலைகளைப் பழுது பார்த்ததில் ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ​​திரு​வான்​மியூர் - உத்​தண்டி இடையி​லான உயர்​மட்ட சாலைத் திட்​டத்​தில் மிகப்​பெரிய ஊழல் நடை​பெற்​றுள்​ளது. அதே​போல் சாலைகளைப் பழுது பார்த்​த​தில் ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல் நடை​பெற்​றுள்​ளது என்று பொதுப்​பணித் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் பொதுப்​பணி, நெடுஞ்​சாலை, சிறு​துறை​முகங்​கள் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை​களில் கடந்த 6 மாதங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட நடவடிக்​கைகள், திட்​டங்​கள் குறித்த புத்​தகத்தை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா தலை​மைச் செயல​கத்​தில் நேற்று வெளி​யிட்​டார்.

அதன்​பின் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அரசுத் துறை​களின் செயல்​பாடு​களில் வெளிப்​படைத்​தன்​மையை ஏற்​படுத்​து​வதே அரசின் நோக்​கம்.

கடந்த ஆட்​சிக் காலத்​தில் பொதுப்​பணித் துறை​யில் ஊழல் அதி​க​மாக இருந்​தது. தவெக ஆட்​சிக்கு வந்​ததும் முதல் 6 மாதங்​களில் துறை​களை மறுசீரமைத்​துள்​ளோம். அரசு டெண்​டர்​களில் வெளிப்​படைத்​தன்மை கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

கடந்த காலங்​களில் அமைச்​சர்​களின் பினாமி நிறு​வனங்​கள் பல்​வேறு டெண்​டர்​களைப் பெற்​றுள்​ளன. இதுதொடர்​பாக புகார் அளித்​துள்​ளோம். தற்​போதைய ஆட்​சி​யில் ஒரு குடும்​பத்​தின் ஆதிக்​கம் இருக்​காது.

2025-ல் நெடுஞ்​சாலைத் துறை​யில் சாலைகளில் உள்ள பள்​ளங்​களை சீரமைக்​கும் ‘பேட்ச் ஒர்க்’ பணி​களுக்​காக மட்​டும் ரூ.2,200 கோடி ஒதுக்​கப்​பட்டு ஊழல் நடை​பெற்​றுள்​ளது.

திரு​வான்​மியூர் - உத்​தண்டி உயர்​மட்ட சாலைத் திட்​டம் ஆலோ​சனைக் குழு​வின் பரிசீலனை​யில் உள்​ளது. இதி​லும் மிகப்​பெரிய ஊழல் நடை​பெற்​றுள்​ளது.

இத்​திட்​டத்தை மீண்​டும் செயல்​படுத்​தி​னாலும் புதி​தாக டெண்​டர் கோரப்​படும். தேனாம்​பேட்டை - சைதாப்​பேட்டை உயர்​மட்ட சாலைப் பணி​கள் முடிக்​கப்​பட்​டு, ஏப்​ரல் மாதத்​துக்​குள் திறக்​கப்​படும்.

அரசுக் கட்​டிடங்​கள் அடுத்த 75 ஆண்​டு​களுக்​குப் பயன்​படும் வகை​யில் தரமாகக் கட்​டப்​படும். மருத்​து​வ​மனை​கள், ஆட்​சி​யர் அலு​வல​கங்​கள் உள்​ளிட்​டவை தரை தளம் மற்​றும் 14 மாடிகளு​டன் அமைக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தரமற்ற அரசு கட்​டிடங்​கள் இனி கட்​டப்​ப​டாது.

5,226 பள்​ளி​களில் ஆய்வு நடத்​தப்​பட்​டுள்​ளது. பயன்​படுத்த முடி​யாத நிலை​யில் உள்ள கட்​டிடங்​களுக்​குச் சிவப்பு நிற எச்​சரிக்கை ஸ்டிக்​கர் ஒட்​டப்​பட்​டுள்​ளது.

அரசுப் பள்​ளி​களில் 15,661 கழிப்​பறை​கள் பயன்​படுத்த முடி​யாத நிலை​யில் உள்​ளன. அடுத்த 2 ஆண்​டு​களில் பள்​ளி​கள், சமூகநீ​தித் துறை விடு​தி​கள், மருத்​து​வ​மனை​களின் அடிப்​படை வசதி​கள் மேம்​படுத்​தப்​படும்.

குறிப்​பிட்ட காலத்​துக்​குள் பணி​களை முடிக்​காத ஒப்​பந்த நிறு​வனங்​கள், கறுப்​புப் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டு, மீண்​டும் டெண்​டரில் பங்​கேற்​கத் தடை விதிக்​கப்​படும். அதி​காரி​களின் பணி​யிட மாறு​தல், பதவி உயர்​வு​களில் நடை​பெறும் முறை​கேடு​களும் தடுக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் 8 மற்​றும் 10 வழிச்​சாலைத் திட்​டங்​கள் குறித்து வரும் 17-ம் தேதி மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரியைச் சந்​தித்​துப் பேச உள்​ளேன்.

சென்னை - மாமல்​லபுரம் - புதுச்​சேரி இடையே பயணி​கள் படகு போக்​கு​வரத்​தைத் தொடங்​கு​வதற்​கான ஆரம்​பகட்ட டெண்​டர் பணி​கள் நடை​பெறுகின்​றன.

இதுத​விர சென்​னை​யில் சாலை, மழைநீர் வடி​கால் பணி​களை இனி நெடுஞ்​சாலைத் துறையே மேற்​கொள்​ளத் திட்​ட​மிட்​டுள்​ளது. திரு​வண்​ணா​மலை கிரிவலப் பாதைக்​குத் தனிச்​சாலை அமைப்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

விளை​யாட்​டுத் துறை​யில் ஸ்போர்ட்ஸ் சிட்​டி, 10 இடங்​களில் ஒலிம்​பிக் அகாட​மிகள், மாவட்​டந்​தோறும் விளை​யாட்டு விடு​தி​கள் அமைக்​க நடவடிக்​கை எடுக்​கப்​படு​கிறது. சென்​னை நேரு விளை​யாட்​டு அரங்​கில்​ 25 ஆயிரம்​ முதல்​ 30 ஆயிரம்​ ​மாணவர்​கள்​ தங்​கு​வதற்​​கான ஏற்​​பாடு​களும்​ மேற்​கொள்​ளப்​பட்​டு வரு​கின்​றன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT