தமிழகம்

கனிமவள கடத்தல் விவகாரம்: அண்ணாமலை, அன்புமணி தமிழக அரசுக்கு கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: க​னிம வளக் கடத்​தலுக்கு திமுக அமைச்​சர்​கள் உடந்​தை​யாக இருப்​ப​தாக பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோர் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​காசி மாவட்​டத்தில் இருந்து கேரளா​வுக்​குத் தங்​கு தடை​யின்றி நடை​பெறும் சட்​டவிரோதக் கனிமவளக் கடத்தலைக் கட்​டுப்படுத்த ஆளும் திமுக அரசு தவறி​விட்​டது. இந்தக் கனிமவளக் கடத்​தல் தொடர்​பாகப் பலமுறை முதல்​வர் மு.க.ஸ்டாலின் கவனத்​துக்குக் கொண்டு சென்றும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்​கையும் எடுக்​க​ப்படவில்​லை. இந்தக் கடத்​தலுக்கு முன்​னாள் மற்​றும் தற்​போதைய அமைச்​சர்​களே ஆதர​வாக இருக்​கின்​றனர்.

இதன்படி தின​மும் ஆயிரக்​கணக்​கான லாரி​களில் தமிழகத்தில் இருந்து கனிமங்​கள் கடத்​தப்​படு​கின்​றன. இதனால் இயற்கை வளங்​கள் அழி​வதுடன், அப்​பகுதி மக்​களும் பாதிக்​கப்​படு​கின்​றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​காசி மாவட்​டம் கடை​யம் உள்​ளிட்ட பகு​தி​களில் நடை​பெறும் கனிமவளக் கொள்​ளையை தடுக்க முடிய​வில்​லை. இந்த விவ​காரத்​தில் திமுக நெல்லை மேற்கு மாவட்ட சுற்​றுச்​சூழல் அணி துணை அமைப்​பாளர் கடையம் சந்​திரசேகர் ராஜி​னாமா செய்​துள்​ளார். அவர் எடுத்​துள்ள முடிவு சரி​யானது.

தென் மாவட்​டங்​களில் பல்​லா​யிரம் கோடி அளவுக்கு கனிம கொள்ளை நடை​பெறுகிறது. இதில் திமுக​வுக்​குப் பங்கு இருப்​ப​தாக நான் தொடர்ந்து புகார் தெரி​வித்து வரு​கிறேன். அவை உண்மை என்று தற்​போது நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. இனி​யா​வது கனிமக் கொள்​ளை​யில் ஈடு​படு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT