தமிழகம்

ரூ.2 கோடியில் கனிம பணி கட்டுப்பாட்டு மையம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை​யில் இயற்கை வளங்​கள் துறைக்​கான மானியக் கோரிக்​கை​யின் போது, ‘மாநிலம் முழு​வதும் சுரங்​கப் பணிகளை நிகழ்​நேரத்​தில் கண்​காணிக்க ரூ.2 கோடி​யில் புவி​யியல் மற்​றும் சுரங்​கத் துறை இயக்​குநரகத்​தில் மாநில அளவி​லான சுரங்​கக் கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையம் நிறு​வப்​படும்’ என அறி​விக்​கப்​பட்​டது. இதை செயல்​படுத்த நிர்​வாக அனுமதி அளித்து அரசு உத்​தர​விட்​டுள்​ளது. அதன் விவரம்:

சட்​டப்​பேரவை அறி​விப்பை செயல்​படுத்​தும் வித​மாக இயற்கை வளங்​கள் துறை​யிடம் முன்​மொழிவு பெறப்​பட்​டது. அதில், மாநிலக் கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையம், மாநிலத்​தில் உள்ள சுரங்​கம் மற்​றும் கனிமப் போக்​குவரத்து நட​வடிக்​கைகளைத் தொடர்ந்து கண்​காணிக்​கவும், தகவலறிந்து முடிவு​களை எடுக்​கவும் செயற்கை நுண்​ணறிவு, புவி​யியல் தகவல் அமைப்பு உள்ளிட்டவற்றை ஒருங்​கிணைக்​கும் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பத் தளத்தை இயக்​குநரகத்​துக்கு வழங்​கும்.

இம்​மையம் உரு​வாக்​கும் பகுப்​பாய்வு வெளியீடுகள் தொழில்நுட்ப மற்​றும் ஆலோ​சனை உள்​ளீடுகளாக மட்​டுமே செயல்​படும். நிர்​ணயிக்​கப்​பட்ட நடைமுறை மூலம் உரிய சரிபார்ப்பு, உறுதிப்​படுத்​தலுக்​குப் பிறகே அவற்​றின் மீது நட​வடிக்கை எடுக்​கப்​படும்.

இம்​மையத்தை நிறுவ தொடரா செல​வினமாக ரூ.2 கோடிக்கு புவி​யியல், சுரங்​கத் துறை இயக்​குநர் அரசிடம் அனுமதி கோரினார். அதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT