தமிழகம்

பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் பால் கொள்​முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்​தி, இனி ரூ.44 ஆக வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்ளார்.

சட்​டப்​பேர​வை​யில் 110 விதி​யின்​கீழ் முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் பால் உற்​பத்தி கிராமப் பொருளா​தார மேம்​பாட்​டில் ஒரு முக்​கியப் பங்கு வகிக்​கிறது.

இதைக் கருத்​தில்​கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு சங்​கங்​களில் பால் வழங்​கும் 3.16 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பால் உற்​பத்​தி​யாளர்​கள் பயனடை​யும் வகை​யில் கொள்​முதல் விலையை லிட்​டருக்கு ரூ.3 உயர்த்தி ரூ.41 ஆக வழங்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் ஆகஸ்ட் 19-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், கறவை மாடு​களுக்​கான தீவனம் மற்​றும் இதர இடு​பொருட்​களின் விலை உயர்ந்​துள்​ள​தால், பால் கொள்​முதல் விலையை மேலும் உயர்த்​தித் தர வேண்​டும் என பல்​வேறு கூட்​டுறவு பால் உற்​பத்​தி​யாளர்​கள் நலச்​சங்​கங்​கள் மற்​றும் பால் உற்​பத்​தி​யாளர்​கள் அரசுக்​குக் கோரிக்கை வைத்​தனர்.

அதை பரிசீலனை செய்து, பால் உற்​பத்​தி​யாளர்​கள் பயனடை​யும் வித​மாக கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44 ஆக வழங்கதமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இந்த விலை உயர்​வால் மாதம் ரூ.60 கோடி வீதம் ஆண்​டுக்கு ரூ.720 கோடி செல​வாகும். இந்த செல​வினத்தை ஆவின் நிறு​வனத்​துக்கு அரசு ஈடுசெய்​யும். இவ்​வாறு முதல்வர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT