மேட்டூர் அணை.

 
தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 94.66 அடியாக சரிவு

செய்திப்பிரிவு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணை நீர்​மட்​டம் 94.66 அடி​யாக சரிந்​துள்​ளது.

காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை தணிந்​துள்​ள​தால், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து குறைந்து வரு​கிறது. அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 116 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 35 கனஅடி​யாக சரிந்​தது.

          

அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. நீர்​வரத்தை விட, தண்​ணீர் திறப்பு அதி​க​மாக உள்​ள​தால் அணை​யின் நீர்​மட்​டம் குறைந்து வரு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் 95.17 அடியி​லிருந்து 94.66 அடி​யாக​வும், நீர் இருப்பு 58.76 டிஎம்​சியி​லிருந்து 58.14 டிஎம்​சி​யாக​வும் சரிந்​துள்​ளது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் கடந்த22-ம் தேதி காலை விநாடிக்கு 4,000 கனஅடி​யாக பதி​வான நீர்​வரத்​து, 23-ம் தேதி காலை 1,500 கனஅடி​யாக குறைந்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை நீர்​வரத்து வி​நாடிக்கு 1,200 கனஅடி​யாக மேலும்​ குறைந்​தது.

SCROLL FOR NEXT