தமிழகம்

மேகேதாட்டு அணை கட்ட முயற்சித்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்: கர்நாடக அரசுக்கு அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: மேகேதாட்டு அணை கட்​டுவதற்கு ஒரு செங்​கலைக் கூட வைக்க முதல்​வர் அனுமதிக்க மாட்​டார். அணை கட்​டும் முயற்​சி​யில் கர்​நாடக அரசு ஈடு​பட்​டால் மிகப்​பெரிய விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று தமிழக எரிசக்தி மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர்.நிர்​மல் குமார் தெரி​வித்​தார்.

தூத்​துக்​குடி அனல்​மின் நிலை​யத்​தில் கடந்த ஆண்டு ஏற்​பட்ட தீ விபத்​தில் சேதமடைந்த 1-வது அல​கில் சீரமைப்​புப் பணிகள் முடிந்​ததை தொடர்ந்து சோதனை ஓட்​டத்தை அமைச்​சர் தொடங்கி வைத்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

மேகேதாட்டு அணை விவகாரத்​தில் தமிழக அரசின் நிலைப்​பாடு மிகவும் தெளிவாக உள்​ளது. எந்​தச் சூழ்​நிலை​யிலும் மேகேதாட்டு அணை கட்​டுவதற்கு ஒரு செங்​கல்​கூட வைக்க தமிழக முதல்​வர் அனுமதிக்க மாட்​டார். கர்​நாடக அரசு என்ன முயற்சி மேற்​கொண்​டாலும், அதை எதிர்த்து தமிழக அரசு கடுமையான எதிர்​வினையாற்​றும்.

இந்த விவகாரம் தொடர்​பாக பசுமைத் தீர்ப்​பாயம் உள்​ளிட்ட உரிய சட்ட அமைப்​பு​களிடமும், உச்ச நீதி​மன்​றத்​திலும் தமிழக அரசு முறை​யிட்​டுள்​ளது.

மேகேதாட்​டுவில் தமிழகத்தை மீறி ஒரு செங்​கல்​கூட வைக்க முடி​யாது. அத்​தகைய முயற்​சி​யில் கர்​நாடக அரசு ஈடு​பட்​டால் மிகப்​பெரிய விளைவு​களைச் சந்​திக்க நேரிடும்.

புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை​யில் கடந்த 6 மாதங்​களாக பேட்​டரி மின்​சேமிப்​புக் கொள்​கையை உரு​வாக்​கும் பணிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இது​வரை 1,000 மெகாவாட்​டுக்​கும் அதி​க​மான மின்​சேமிப்​புத் திட்​டங்​களுக்​கான விண்​ணப்​பங்​கள் வந்​துள்​ளன. அவற்​றைச் சரிபார்த்து அனுமதி வழங்​கு​வதற்​கான பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன. பகல் நேரங்​களில் சூரிய மின்​சக்தி மூலம் கிடைக்​கும் உபரி மின்​சா​ரத்தை பேட்​டரி​களில் சேமித்து இரவு நேரங்​களில் மின்​தேவை அதி​கரிக்​கும்​போது பயன்​படுத்​து​வதே இதன் நோக்​க​மாகும். 2029-ம் ஆண்​டுக்​குள் 10 ஜிகாவாட் அளவி​லான பேட்​டரி மின்​சேமிப்பு வசதியை உரு​வாக்க இலக்கு நிர்​ணயித்​துள்​ளோம்.

மாநிலத்​தின் எதிர்​கால மின்​தேவையை கருத்​தில் கொண்டு புதிய மின் கொள்​முதல் கொள்கை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதன் ஒரு பகுதி​யாக நடுத்​தர கால மின் கொள்​முதல் ஒப்​பந்​தங்​களுக்​கான ஒப்​பந்​தப்​புள்​ளி​கள் கோரப்​பட்​டுள்​ளன.இவ்​வாறு அமைச்​சர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT