தமிழகம்

தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​துக் கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கலந்​தாய்​வுக் கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் நாளை (ஆகஸ்ட் 8) நடை​பெறுகிறது.

நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இந்​நிலை​யில், தொகுதி மறு​வரையறை பணி​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு முதல்​வர் விஜய் அழைப்பு விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட அறி​விப்​பில், “மத்​திய அரசால் மேற்​கொள்ள உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ள தொகுதி மறு​வரையறை பணி​கள் மற்​றும் அதனால் தமிழகத்​துக்கு ஏற்​படும் தாக்​கங்​கள் குறித்​து, மாநில எம்​.பி.க்​களின் கலந்​தாய்​வுக் கூட்​டம் நாளை (சனிக்​கிழமை) மதி​யம் 3 மணிக்கு சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நடத்​தப்பட உள்​ளது. இதற்கு முதல்​வர் விஜய் தலைமை வகிப்​பார்.

இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் அனைத்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டு வரு​கிறது”என்று கூறப்​பட்​டுள்​ளது. கா​விரி நதிநீர் விவ​காரத்​தில் அனைத்​துக் கட்​சிகளின் கூட்​டத்தை தவெக தவிர்த்​து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT