முதல்வர் விஜய்

 
தமிழகம்

மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சம் ஆக உயர்வு: பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எம்எல்ஏ.க்களுக்குக் கார், மாதாந்திர பராமரிப்புக்கு ரூ.75,000

செய்திப்பிரிவு

சென்னை: “​முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் காப்​பீட்​டுத் தொகை ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படு​கிறது. எம்​எல்​ஏ.க்​களுக்​குக் கார் மற்​றும் ஓட்​டுநர், மாதாந்​திர பரா​மரிப்பு செல​வுக்கு ரூ.75,000 வழங்​கப்​படும்” என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேரவை நேற்று காலை கூடியதும் 110 விதி​யின் கீழ் பல்​வேறு அறி​விப்​பு​களை வெளி​யிட்டு முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது:

ஒரு உயி​ரின் மதிப்​பை, அவரது வரு​மானம் தீர்​மானிக்​கக் கூடாது. வசதி படைத்​தவர், வசதி குறை​வான​வர் என்ற நிலை, மருத்​து​வத் துறை​யில் இருக்​கக் கூடாது. அனை​வ​ருக்​கும் சமமான மருத்​து​வச் சேவை, எளி​தாகக் கிடைக்க வேண்​டும் என்​ப​தில் நமது அரசு உறு​தி​யாக உள்​ளது.

மருத்​து​வம் என்​பது சலுகை அல்ல; ஒவ்​வொரு மனிதனின் அடிப்​படை உரிமை.

ஒரு மனிதனின் உயிரைக் காப்​பாற்​று​வ​தில் தாமத​மாகும் ஒவ்​வொரு நொடி​யும் மிக கொடியது. மருத்​து​வத்​தைத் தேடி வரும் மக்​களின் பாதை​யில் இருக்​கும் தடைகளான வறுமை, தொலை​வு, மருத்​து​வர் பற்​றாக்​குறை, மருந்​து​களின் விலை, மருத்​துவ விழிப்​புணர்வு இல்​லாமை, காத்​திருப்​பு, அவசர கால வசதி​யின்மை போன்​றவற்​றைப் படிப்​படி​யாக அகற்​றி, ஏழை - பணக்​காரர், கிரா​மம் - நகரம் என்ற பாகு​பாடின்​றி, ஒவ்​வொரு​வ​ருக்​கும் தரமான மற்​றும் எளி​தான மருத்​து​வச் சேவை கிடைக்க செய்​வதை முதன்​மை​யான நோக்​க​மாகக் கொண்டு அரசு செயல்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் சில அறி​விப்​பு​களை வெளி​யிடு​கிறேன்.

முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் இலவச மருத்​து​வச் சிகிச்​சைக்​கான மருத்​து​வக் காப்​பீட்​டுத் தொகை ஓராண்​டுக்​குத் தற்​போதுள்ள ரூ.5 லட்​சத்​தில் இருந்​து, ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படும்.

திருநங்​கையர்​களுக்​கான மருத்​துவ மற்​றும் அறு​வைச் சிகிச்சை சேவை​கள் கூடு​தலாகச் சென்னை ஸ்டான்​லி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, செங்​கல்​பட்​டு, திரு​வாரூர், தரு​மபுரி மற்​றும் கன்​னி​யாகுமரி ஆகிய 7 அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும்.

தமி​ழ​கத்​தில் கடந்த 2014-ம் ஆண்​டுக்​குப் பிறகு, புதிய அரசு செவிலியர் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் ரூ.351 கோடி​யில் கூடு​தல் மாண​வர் சேர்க்கை இடங்​கள் உரு​வாக்​கப்​படும். 7 புதிய அரசு செவிலியர் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டு, 660 பிஎஸ்சி செவிலியர் மாணாக்​கர் இடங்​கள் உரு​வாக்​கப்​படும்.

ஏற்​கெனவே உள்ள செவிலியர் கல்​லூரி​கள் மற்​றும் செவிலியர் பள்​ளி​களில் கூடு​தலாக 1,925 கூடு​தல் மாணாக்​கர் இடங்​கள், இயன்​முறை மருத்​து​வம் உள்​ளிட்ட 12 துணை மருத்​து​வப் படிப்​பு​களில் 2,778 மாணாக்​கர் இடங்​கள், மருந்​தி​யல் படிப்​பு​களில் 735 கூடு​தல் இடங்​கள் என மொத்​தம் 6,098 கூடு​தல் மாணாக்​கர் இடங்​கள் உரு​வாக்​கப்​படும்.

ரோபோடிக் அறுவை சிகிச்​சை, லீனியர் ஆக்​சலரேட்​டர் கதிர்​வீச்​சு, நவீன கருவி​கள், இலக்கு மற்​றும் நோய் எதிர்ப்பு சிகிச்​சைகளுக்​காக அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு ரூ.106.17 கோடி வழங்​கப்​படும். மருத்​து​வர்​களுக்​குப் பயிற்​சி​யும், நோயாளி​களுக்கு ஊட்​டச்​சத்து ஆதர​வும் ரூ.2.77 கோடி​யில் அளிக்​கப்​படும். மேலும், தரு​மபுரி, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, பெரம்​பலூர் மற்​றும் அரியலூர் ஆகிய மாவட்​டங்​களில் 1.22 லட்​சம் பெண்​களுக்கு ரூ.8.70 கோடி மதிப்​பில் எச்​பிவி டிஎன்ஏ பரி​சோதனை மேற்​கொள்​ளப்​படும்.

மொத்​தம் ரூ.673.44 கோடி மதிப்​பீட்​டில், புற்​று​நோய் தாக்​கத்​தில் இருந்து மக்​களைக் காக்​கும் வகை​யில் பல்​வேறு பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

கார்​கள், சலுகை​கள்

கடந்த ஆக.12-ம் தேதி காட்​டுமன்​னார்​கோ​வில் சட்​டப்​பேரவை உறுப்​பினர் ஜோதி​மணி பேசும்​போது, பல எம்​எல்​ஏ.க்​களிடம் சொந்​த​மாக வாக​னம் இல்​லை. தொகு​திப் பணி​களை ஆய்வு செய்​ய​வும், பார்​வை​யிட​வும் கடின​மாக உள்​ளது. லஞ்​சமில்​லாத நேர்​மை​யான ஆட்சி அமைய உறுப்​பினர்​களின் அடிப்​படை தேவை​களை அரசு பூர்த்தி செய்ய வேண்​டும் என்று கோரிக்கை வைத்​தார்.

தமிழக ​பேரவை வரலாற்​றில், எளிய பின்​னணி​யில் இருந்து பண பலமோ, அரசி​யல் பின்​னணியோ இன்றி மக்​களின் பேரா​தர​வோடு முதல் முறை​யாக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள முதல் தலை​முறை சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கைக் குறிப்​பிடத்​தக்க அளவில் உயர்ந்​துள்​ளது.

பொருளா​தார பலமில்​லாமல் எம்​எல்​ஏ.க்​களாகப் பணி​யாற்​றும் மற்​றும் முதல் முதலாக எம்​எல்​ஏக்​களாக தேர்வு செய்​யப்​பட்ட உறுப்​பினர்​கள் தங்​களது மக்​கள் பணி​யைத் தொய்​வின்​றித் தொடர்​வதற்​கும், அவர்​கள் தங்​கள் தொகு​திப் பணி​களைத் திறம்பட மேற்​கொள்​வதற்​கும் வசதி​யாக அனைத்து எம்​எல்​ஏக்​களுக்​கும் அரசு சார்​பில் வாக​னம் வழங்​கப்​படும்.

இந்த அறி​விப்பு எம்​எல்​ஏக்​கள் எவ்​வித சமரச​மும் இன்றி சுதந்​திர​மாக​வும், நேர்​மை​யாக​வும் தொகு​திக்​குட்​பட்ட கிரா​மப்​புற மற்​றும் தொலை​தூரப் பகு​தி​களுக்கு எளி​தாகப் பயணம் செய்​து, தொகுதி முழு​வதும் உள்ள மக்​களைச் சந்​தித்து அவர்​களின் குறை​களுக்கு தீர்வு காண வழி​வகுக்​கும். மேலும், எம்​எல்​ஏக்​கள் தொகுதி சார்ந்த பல்​வேறு பணி​களை மேற்​கொள்ள ஏது​வாக அவர்​கள் ஒரு உதவி​யாளரை நியமித்​துக் கொள்​வதும் அவசி​யம்.

எனவே, எம்​எல்​ஏ.க்​களுக்கு அரசு வழங்​கும் வாக​னத்தை பரா​மரிக்க, ஓட்​டுநர், எரிபொருள் உள்​ளிட்ட செல​வினங்​களுக்​காக மாதந்​தோறும் ரூ.75,000 வாக​னப் படி​யாக​வும், அலு​வல​கப்

பணி​களில் உதவி செய்ய ஓர் உதவி​யாளரை நியமித்​துக் கொள்ள மாதந்​தோறும் ரூ.25 ஆயிரம் உதவி​யாளர் படி​யாக​வும் வழங்​கப்​படும். இதற்​காக உரிய சட்​டத்​தில் திருத்​தங்​கள் மேற்​கொண்டு ஆணை​கள் வெளி​யிடப்​படும். இவ்​வாறு முதல்​வர் விஜய் அறி​வித்​தார்.

பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று கூறியதாவது: வட சென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோயைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், ‘முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்’ ரூ.673.44 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471.80 கோடியில் தரைதளம் மற்றும் 14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

மேலும், ஐந்து மண்டல புற்றுநோய் மையங்கள் தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும். முதல் கட்டமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடியில் தரை மற்றும் 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT