வைகோ

 
தமிழகம்

தேர்தலில் திமுக பக்கம் நிற்பது ஏன்? - தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைகோ தகவல்

செய்திப்பிரிவு

முன்​னாள் முதல்​வர் கருணாநிதி உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டிருந்த போது அவரிடம் ஒரு வாக்​குக் கொடுத்​தேன். அதை மீறக்​கூ​டாது என்​ப​தால் திமுக பக்​கம் நிற்​கி​றோம். தொகு​தி​கள் குறைக்​கப்​பட்​டதை மகிழ்ச்​சி​யுடன் ஏற்​றுக்​ கொண்​டோம்” என மதிமுக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார்.

சென்னை எழும்​பூரில் உள்ள மதி​முக தலைமை அலு​வல​கத்​தில் சட்​டமன்ற தேர்​தலுக்​கான மதி​முக தேர்​தல் அறிக்​கையை அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ நேற்று வெளி​யிட்​டார். அதில், மாநிலத்​தில் சுயாட்​சி, மத்​தி​யில் கூட்​டாட்​சி, ஆளுநர் பதவி என்​பது அகற்​றப்பட வேண்​டும். கல்விக்​கடன்​களை ரத்து செய்ய வேண்​டும். பூரண மது​விலக்கை அமல்​படுத்த தொடர்ந்து அரசிடம் வலி​யுறுத்​து​வோம் என்பன உள்ளிட்ட வாக்​குறு​தி​கள் இடம்​பெற்​றிருந்​தன.

          

பின்னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய வைகோ கூறிய​தாவது: பாலியல் குற்​றங்​கள் அனைத்​துக் காலங்​களி​லும் நடந்து வரு​கிறது. கடந்த ஐந்து ஆண்​டு​களில் அவை குறைந்​துள்​ளது. பாலியல் வன்​கொடுமை நடப்​ப​தற்கு காரணமே போதைப்​பொருள் கலா​சா​ரம் தான். அதை அரசு கட்​டுப்​படுத்த வேண்​டும். இது​போன்ற செயல்​களில் ஈடு​படும் குற்​ற​வாளி​களை வெளியே வர முடி​யாத அளவுக்கு தண்​டிக்க ஏது​வாக சட்​டம் கொண்​டுவர வேண்​டும்.

தமி​ழ​கத்​தில் இருந்து கனிம வளங்​கள் அண்டை மாநிலங்​களுக்கு கடத்​தப்​படு​வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்​துள்​ளது. இருப்​பினும் சிலர் கண்​ணில் மண்​ணைத் தூவி​விட்டு கடத்தி வரு​கின்​ற​னர்.

முன்​னாள் முதல்​வர் கருணாநிதி உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டிருந்த போது அவரிடம் ஒரு வாக்​குக் கொடுத்​தேன். கொடுத்த வாக்கை மீறக்​கூ​டாது. அதனால் திமுக பக்​கம் நிற்​கி​றோம். தொகு​தி​கள் குறைக்​கப்​பட்​டதை மகிழ்ச்​சி​யுடன் ஏற்​றுக்​கொண்​டோம்.

எங்​கள் தொண்​டர்​கள் தலை​மை​யின் முடிவை ஏற்​றுக்​கொள்​வார்​கள். மற்ற கட்​சிகள் கூடு​தல் தொகு​தி​கள் கேட்​கலாம். அதைப் பற்றி எனக்​குக் கவலை இல்​லை. மதி​முக செறிவூட்​டப்​பட்ட திரா​விட இயக்​கம். மதவாத சக்​தி​கள் தமி​ழ​கத்​தில் காலூன்​று​வதை தடுப்​பதே எங்​கள் இலக்​கு.

விஜய் குறித்து பல கருத்​துக்​கணிப்​பு​கள் வரு​கிறது. தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​படும் போது அவரின் நிலை என்ன என்​பது தெரி​யும். பல கணிப்​பு​களை தேர்​தல் முடிவு​கள் தவிடு​பொடி​யாக்​கி​யுள்​ளன. விஜய் செல்​லும் இடங்​களில் அவருக்கு நல்ல கூட்​டம் கூடு​கிறது. ஆனால், அவர் எப்​படிப் பேசுகி​றார், என்ன பேசுகி​றார், எப்​படிச் செயல்​படு​கி​றார் என்று நான் விமர்​சிக்க விரும்​ப​வில்​லை.

ரஜினி​காந்தை திமுக மிரட்​டியது என்ற செய்தி உண்​மைக்​குப் புறம்​பானது. ரஜினி​காந்த் மிக​வும் தைரிய​மான நேர்​மை​யான நபர். யார் மிரட்​டலுக்​கும் அஞ்​சக்​கூடிய​வர் அவர் கிடை​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT