தமிழகம்

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுக: மதிமுக, இந்திய கம்யூ. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்​பப்​பெற வேண்​டும் என மத்​திய அரசுக்கு மதி​முக மற்​றும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: ஏற்​கெனவே கடந்த 2 மாதங்​களாக சமையல் காஸ் சிலிண்​டர் விநி​யோகம் தடை​பட்​ட​தால் உணவகங்​கள் கடுமை​யாக பாதிப்பு அடைந்​ததுடன், உணவுப் பொருட்​களின் விலை​யும் தாறு​மாறாக உயர்ந்து விட்​டது. இந்​நிலை​யில் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சமையல் காஸ் சிலிண்​டர் விலை உயர்வு என்​பது பொது​மக்​களை கடுமை​யாக பாதிக்​கும். மத்​திய அரசு இந்த விலை உயர்வை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: வணிக காஸ் சிலிண்​டர் ஒன்​றுக்கு தலா ரூ.993 விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக ஆயிரக்​கணக்​கான உணவகங்​கள், தேநீர் உள்​ளிட்ட பலகாரக் கடைகள் மூடப்​பட்​டுள்​ளன. வணிக காஸ் சிலிண்​டர்​கள் சிறு, குறு வணி​கர்​களின் கைகளுக்கு எட்​டாப் பொருளாகி​விட்​டது. மக்​கள் நலனை பேணுவ​தாக பேசி வரும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்​பின் அனு​மதி கேட்டு காத்து கிடப்​பது வெட்​கக்​கே​டானது. இந்த விலை உயர்வை மத்​திய அரசு திரும்​பப் பெற வேண்​டும்.

SCROLL FOR NEXT