கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு மே, டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளுக்கான முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியிடப்பட்டன. தேர்வர்கள் தங்கள் பதிவெண்ணைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.