தமிழகம்

கோயில் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, ஓய்வுகால பலன்கள் உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகள் 2020-ல் உரியதிருத்தம் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

இதன்மூலம் ஓய்வு பெறும் கோயில் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாட்கள் வரை ஒப்படைத்து, அதற்குரிய பணப்பலனைப் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு இணையாக 12 மாத மகப்பேறு விடுப்பினை பெற்று பயனடையவழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோயில் பணியாளர்களின் பணிநலன், குடும்ப நலன், சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இரு முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள் ளன என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT