தாராபுரத்தில் களைகட்டும் பிரச்சாரம்: மு.க.ஸ்டாலின், பழனிசாமி இன்று ரோடு ஷோ

4-ம் தேதி முதல்​வர் விஜய் மீண்​டும் வருகை
தாராபுரத்தில் களைகட்டும் பிரச்சாரம்: மு.க.ஸ்டாலின், பழனிசாமி இன்று ரோடு ஷோ
Updated on: 
1 min read

தாராபுரம்: திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்,அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஆகியோர் தாராபுரம் தொகு​தி​யில் இன்று ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்​கின்​றனர். முதல்​வர் விஜய் வரும் 4-ம் தேதி மீண்​டும் தாராபுரத்​தில் பிரச்​சாரம் செய்​கிறார்.

தாராபுரம் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரம் களை​கட்டி வரு​கிறது. திமுக, தவெக, அதி​முக உள்​ளிட்ட முக்​கிய கட்​சிகளின் தலை​வர்​கள் பிரச்​சா​ரத்தை தீவிரப்​படுத்தி உள்​ளனர்.

இந்​நிலை​யில், திமுக வேட்​பாளர் சுகன்​யாவை ஆதரித்​து, கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தாராபுரத்​தில் இன்று (அக். 2) பிரச்​சா​ரம் செய்ய உள்​ளார். இதற்​காக நேற்று இரவு விமானத்​தில் கோவை வந்த மு.க.ஸ்​டா​லின், தாராபுரம் அரு​கே​யுள்ள கள்ளி மந்​த​யம் பகு​தி​யில் முன்​னாள் அமைச்​சர் அர.சக்​கர​பாணிக்கு சொந்​த​மான இல்​லத்​தில் தங்​கி​னார்.

இன்று காலை தாராபுரம் பேருந்து நிலைய பகு​தி​யில் ரோடு ஷோ தொடங்​கு​கிறார். 15 முக்​கிய சாலைகள் வழி​யாக ரோடு ஷோ நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மாலை 5 மணி அளவில் தாராபுரம் - உடுமலை சாலை​யில் சித்​த​ரா​வுத்​தன்​பாளை​யம் மாரு​தி நகரில் நடை​பெறும் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​தில் பேசுகிறார்.

அதி​முக வேட்​பாளர் பானு​ம​தியை ஆதரித்து கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் கே.பழனி​சாமி செப். 27, 28-ம் தேதி​களில் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். 2-வது கட்​ட​மாக இன்று மாலை 4 மணி அளவில் தாராபுரம் தொகு​திக்கு உட்பட்ட தளவாய்​பட்​ட​ணத்​தில் தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறார்.

தாராபுரம் அலங்​கி​யம் சாலை​யில் இருந்து அண்​ணா சிலை வரை​யில் ரோடு ஷோ செல்​கிறார். மாலை 6 மணி அளவில் தாராபுரம் காவல் நிலை​யம் அரு​கில் பேசுகிறார்.

முதல்​வர் ரோடு ஷோ: தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவை ஆதரித்து கட்​சித் தலை​வரும், முதல்​வரு​மான விஜய் தாராபுரத்​தில் நேற்று முன்​தினம் ரோடு ஷோ நடத்​தி​னார். பொதுக்​கூட்​டத்​தி​லும் பங்​கேற்​றார். பிரச்​சா​ரத்​தின் இறுதி நாளான வரும் 4-ம் தேதி மீண்​டும் தாராபுரம் வரும் முதல்​வர் விஜய், பிரம்​மாண்ட ரோடு ஷோவில் பங்​கேற்க உள்​ள​தாக கட்சி நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.

திமுக இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின் ஏற்​கெனவே பிரச்​சா​ரம் செய்த நிலையில், மீண்​டும் நாளை (3-ம் தேதி) தாராபுரத்​தில் பிரச்​சாரம் செய்​கிறார்​.

தாராபுரத்தில் களைகட்டும் பிரச்சாரம்: மு.க.ஸ்டாலின், பழனிசாமி இன்று ரோடு ஷோ
ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர் நீதிமன்றம் சவுக்கடி: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in