தமிழகம்

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி தனது அதி​காரப்பூர்வ எக்ஸ் பக்கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: வீட்டு உபயோகத்​துக்​கான சமையல் காஸ் சிலிண்​டர் விலை மீண்​டும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது சாமானிய மக்​களுக்​குக் கடும் அதிர்ச்​சி​யளிப்​ப​தாக உள்​ளது.

தற்​போது சிலிண்​டருக்கு ரூ.29 உயர்த்​தப்​பட்​டிருப்​ப​தன் மூலம், கடந்த 3 மாதங்​களில் மட்​டும் ஒட்​டுமொத்​த​மாக ரூ.89 வரை சிலிண்​டர் விலை உயர்ந்​துள்​ளது.

இதன் காரண​மாக, சென்​னை​யில் வீட்டு உபயோகத்​துக்​கான சிலிண்​டர் விலை ரூ.957.50 ஆகவும், வர்த்தக பயன்​பாட்​டிற்​கான சிலிண்​டர் விலை ரூ.3,283 ஆகவும் அதி​கரித்து விற்​பனை செய்​யப்​படு​கிறது.

கடந்த 15 நாட்​களுக்கு முன்பு ஒரு பீப்​பாய் கச்சா எண்​ணெய் 108 டாலருக்கு விற்​கப்​பட்ட நிலை​யில், தற்​போது அது சுமார் 15 டாலர் வரை சரிந்​துள்​ளது. இப்​படி சர்​வ​தேச சந்தை நில​வரம் சாதக​மாக இருந்​தும், தொடர்ச்​சி​யாக இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல் மற்​றும் சமையல் எரி​வாயு விலையை உயர்த்​து​வது அநி​யாய​மானது.

மத்​திய ஆட்​சி​யாளர்​கள் 5 மாநில தேர்​தல் காரண​மாக, எரிபொருள் மற்​றும் சமையல் எரி​வாயு விலை உயர்த்​தப்​ப​டா​மல் இருந்​த​தாக​வும், அந்த இழப்பை ஈடு​கட்​டவே தற்​போது, தொடர்ச்​சி​யாக விலை உயர்த்​தப்​படு​கிறது என்று கூறுகிறார்​கள்.

அரசு நினைத்​தால் விலை உயர்வை நிறுத்தி வைத்து மக்​களுக்கு நிவாரணம் வழங்க முடி​யும். ஆனால், தேர்​தல் ஆதா​யத்​துக்​காக விலையை உயர்த்​தாமல் நாடக​மாடிய மத்​திய அரசு, தேர்​தல் முடிந்​தவுடன் விலையை ஏற்றி மக்​களைத் துன்​புறுத்​துகிறது.

இதனால் அனைத்து அத்​தி​யா​வசி​யப் பொருட்​களின் விலை​யும் கடுமை​யாக உயர்ந்து வரு​கிறது. இந்​தி​யா​வில் பணவீக்​கம் தொடர்ச்​சி​யாக அதி​கரித்து வரும் நிலையில், மொத்த விற்பனை விலை பணவீக்​கம் கடந்த மூன்​றரை ஆண்​டு​களில் முதன்​முறை​யாக 8.3 சதவீத​மாக அதி​கரித்​துள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT