ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர்ச் சந்தையில் குவிந்த மக்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: கடைசி நாள் விற்பனையில் களைகட்டிய சந்தைகள்

செய்திப்பிரிவு

சென்னை: ஆயுத பூஜை இன்று கொண்​டாடப்​படும் நிலை​யில், பண்​டிகைக்கு முந்​தைய நாளான நேற்று முக்​கிய கடைவீ​தி​கள், சந்​தைகளில் விற்​பனை களை கட்​டியது.

சென்னை கோயம்​பேடு, தி.நகர், பாரி​முனை, வண்​ணாரப்​பேட்​டை, புரசை​வாக்​கம், பெரம்​பூர் ஆகிய பகு​தி​களில் மக்​கள் பெரு​மள​வில் திரண்​ட​தால் அப்பகு​தி​கள் விழாக்​கோலம் பூண்​டன.

மக்​கள் வருகை அதி​கரித்த அதேவேளை​யில், வரத்து குறைவு மற்​றும் திடீர் தேவை காரண​மாக அத்​தி​யா​வசி​யப் பொருட்​களின் விலை​யும் விண்ணை தொட்​டது.

கோயம்​பேடு மலர் சந்​தை​யில் மல்​லிகை பூ கிலோ ரூ.500 முதல் ரூ.1,200 வரை எகிறியது. ஜாதி​மல்லி ரூ.750-க்​கும், முல்லை ரூ.300 முதல் ரூ.800 வரை​யிலும், சாமந்தி ரூ.200 முதல் ரூ.250 வரை​யிலும், சம்​பங்கி ரூ.210-க்​கும், ரோஜா ரூ.140-க்​கும் விற்​பனை​யானது.

பூக்​களின் விலை கிடு​கிடு​வென உயர்ந்​த​தால், சாதாரண மலர் மாலைகளின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.400 வரை இரு​மடங்​காக உயர்ந்​தது. இதே​போல் பழங்​கள் மற்​றும் பூஜை பொருட்​களின் விலை​யும் சூடு​பிடித்​தது.

ஆப்​பிள் கிலோ ரூ.165, சாத்​துக்​குடி ரூ.80, பொரி ஒரு படி ரூ.20 முதல் ரூ.50 வரை, பொட்​டுக் கடலை கிலோ ரூ.100, அவல் ரூ.120, வெள்ளை பூசணி ரூ.50 முதல் ரூ.100 வரை, வாழைக்​கன்று ஜோடி ரூ.40, கரும்​புக் கட்டு ரூ.500 என விற்​கப்​பட்​டது.

சில்​லறை விற்​பனைக் கடைகளில் இவற்​றின் விலை மேலும் கூடு​தலாக இருந்​தது. மாலை வேளை​யில் அலு​வல​கம் முடிந்து வீடு திரும்​புவோர், சொந்த ஊர்​களுக்​குப் புறப்​பட்ட பயணி​கள் மற்​றும் கடைசி நேர கொள்​முதலில் ஈடு​பட்ட உள்ளூர் ​மக்​கள் என அனை​வரும் ஒரே நேரத்​தில் வீதி​களில் இறங்​கிய​தால் முக்​கிய சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT