தமிழகம்

“கடந்த ஆட்சி முறைகேடுகள் விரைவில் வெளியாகும்” - நிதி அமைச்சர் மரியவில்சன் தகவல்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: கடந்த ஆட்​சி​யின் முறை​கேடு​கள் அனைத்​தும் விரை​வில் வெளியே தெரிய​வரும் என நிதி அமைச்​சர் மரிய வில்​சன் தெரி​வித்​தார்.

கும்​பகோணத்​துக்கு நேற்று வந்த அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: கும்​பகோணத்​தில் 2028-ல் மகா மகம் நடத்​து​வது தொடர்​பாக, வேளாண்​மைத் துறை அமைச்​சர் வினோத் முதல்​வரிடம் வைக்​கும் கோரிக்​கைகள் அடிப்​படை​யில் முடிவு​கள் எடுக்​கப்​படும். மாநிலத்​தின் வரு​வாய் மிகப் பெரிய வீழ்ச்​சி​யடைந்த விவ​காரத்​தில் உள்ள லீக்​கேஜ்கள் வரும் நாட்​களில் அடைக்​கப்​படும். லீக்​கேஜ்கள் அடைக்​கப்​பட்​டாலே வரு​வாய் சீராகி​விடும்.

கடந்த ஆட்​சிக்​காலத்​தில் நடை​பெற்ற ஊழல், முறை​கேடு​கள் குறித்து முதல்​வர் ஆய்வு செய்து வரு​கிறார். அதன் அடிப்​படை​யில் என்ன நடவடிக்கை எடுப்​பது என முதல்​வர் முடிவு செய்​வார். பின்​னர், அனைத்​தும் அனை​வருக்​கும் விரை​வில் தெரிய​வரும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அப்​போது, அமைச்​சர் வினோத் உடனிருந்​தார். முன்​ன​தாக, அமைச்​சர்​கள் 2 பேரும் கும்​பகோணத்​தில் உள்ள தூய அலங்​கார அன்னை பேரால​யத்​தில் மெழுகு​வர்த்தி ஏற்றி வழிபட்​டனர். தொடர்ந்​து, ஆதி​கும்​பேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தனர்.

SCROLL FOR NEXT