மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

தமிழகத்துக்கான ரூ.5,109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்​துக்கு சேர வேண்​டிய ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்​வித் திட்​டத்​தின் நிலு​வைத் தொகை​யான ரூ.5,109 கோடியை மத்​திய அரசு உடனடி​யாக விடுவிக்க வேண்​டும். மும்​மொழிக் கொள்கை எதிர்ப்பு மற்​றும் தேசி​யக் கல்விக் கொள்கை நிராகரிப்பு போன்ற தமிழகத்​தின் நியாய​மான நிைலப்​பாட்​டிற்​குப் பழி​வாங்​கும் வகை​யில், கடந்த 3 ஆண்​டு​களாகக் கல்வி நிதி​யைத் தடுத்து நிறுத்தி வைத்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது” என தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழகத்​தின் கல்வி உரிமை​களை நசுக்​கி, மாணவர்​களின் எதிர்​காலத்​தைப் பாழாக்​கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது. தமிழகத்​திற்​குச் சேர வேண்​டிய ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்​வித் திட்ட நிதி​யைத் தடுத்து நிறுத்​தி, கடந்த 3 ஆண்​டு​களில் மட்​டும் ரூ.5,109 கோடியை விடுவிக்​காமல் வஞ்​சித்து வரும் மத்​திய அரசின் பழி​வாங்​கும் அரசி​யலை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன்.

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை கொள்கை விளக்​கக் குறிப்​பின்​படி, 2024-25 நிதி​யாண்​டில் ரூ.1,788 கோடி, 2025-26-ல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதி​யாண்​டில் ரூ.1,825 கோடி என மொத்​தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்​தி​யுள்​ளது. உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்ட பிறகு இத்​திட்​டத்​திற்கு ரூ.714 கோடியை மட்​டும் பெயரளவுக்கு விடு​வித்​து​விட்​டு, பள்​ளிக் கல்விக்​கான ஒட்​டு மொத்த நிதி​யை​யும் பிடித்து வைத்​துப் பிளாக்​மெ​யில் செய்​வது வெட்​கக்​கே​டானது.

மத்​திய அரசின் நிதி​யுதவி இல்​லாத போதி​லும், தமிழக அரசு தனது சொந்த நிதியி​லிருந்து கடந்த 2 ஆண்​டு​களில் ரூ.2,014 கோடியை​யும், நடப்​பாண்​டில் ரூ.647 கோடியை​யும் ஒதுக்​கிப் பள்​ளி​களை நடத்தி வரு​கிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதி​கார மமதை​யால் அரசுப் பள்ளி மாணவர்​களின் கற்​றல் திறன் மேம்​பாடு, ஆசிரியர் பயிற்​சிகள் மற்​றும் பள்​ளிக் கட்​டமைப்​புப் பணி​கள் கடுமை​யான நெருக்​கடிக்கு உள்​ளாகின்​றன.

மும்​மொழிக் கொள்கை விலக்கு உள்​ளிட்ட தமிழகத்​தின் நியாய​மான குரலை நசுக்​கி, பிஎம்  மற்​றும் தேசி​யக் கல்விக் கொள்​கையை கட்​டாய​மாகத் திணிக்​கத் துடிக்​கும் மோடி அரசின் அரசி​யல் பிடி​வாதத்​திற்​குப் பிஞ்​சுக் குழந்​தைகளின் கல்​வியைப் பணயம் வைப்​ப​தா? இது கூட்​டாட்​சித் தத்​து​வத்​தின் மீதான அப்​பட்​ட​மான தாக்​குதல்.

தமிழக மாணவர்​களின் எதிர்​காலத்​தோடு விளை​யாடும் இந்த அநீ​தியை உடனடி​யாகக் கைவிட வேண்​டும். எந்​த​வித நிபந்​தனை​யுமின்றி தமிழகத்​திற்​குச் சேர வேண்​டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலு​வைத் தொகையை உடனே விடுவிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT