தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

‘புத்தக கொள்முதல் ஊழல் குறித்து உதயநிதியிடம் விசாரிக்க வேண்டும்’ - மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: புத்​தக கொள்​முதல் ஊழல் குறித்து உதயநிதி ஸ்டா​லி​னிடம் கட்​டாயம் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் கூறியுள்​ளார்.

மதுரை, திண்​டுக்​கல், தேனி மாவட்ட காங்​கிரஸ் சார்​பில் மண்​டல நிர்​வாகி​கள், ஒருங்​கிணைப்​பாளர்​கள் பயிற்சி முகாம் திண்​டுக்​கல்​லில் நேற்று நடை​பெற்​றது. காங்​கிரஸ் ஒருங்​கிணைப்பு கமிட்டி தலை​வர் பீட்​டர் அல்​போன்ஸ் முகாமை தொடங்கி வைத்​தார். அமைச்​சர் விஸ்வநாதன், தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் மாணிக்​கம் தாகூர் கூறிய​தாவது: தவெக அரசு மீது நம்​பிக்கை இல்லா தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டாலும் அது தோற்​கடிக்​கப்​படும். எப்​போதுமே முதல்​வர் விஜய்​யுடன் காங்​கிரஸ் கட்சி துணை நிற்​கும்.

பாஜக மேலிடப் பொறுப்​பாளராக தமிழகத்​துக்கு நியமிக்​கப்​பட்​டிருக்​கும் ராம்​மாதவ், ஆர்​எஸ்எஸ் அமைப்​பின் முக்​கிய நிர்​வாகி, தமிழகத்தை மத ரீதி​யாகப் பிரிக்க வேண்​டும் என்ற ‘அஜெண்​டாவுடன்’ அவர் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளார். தமிழகத்​தைப் பிரிக்​கும் இந்த சதித் திட்​டத்​துக்கு பழனிசாமி தலை​மையி​லான அதிமுக துணை போகிறது.

இத​னால்​தான் மக்​களிடம் பழனிசாமி மீதான நம்​பிக்கை குறைந்து, அவர்​களு​டன் இருப்​பவர்​களே அவரை விட்டு ஒதுங்​கிச் செல்​கிறார்​கள். சிறப்​புத் திட்​டங்​களின் துறை அமைச்​சராக இருந்த உதயநி​தி​யிடம், புத்​தக கொள்​முதல் ஊழல் குறித்து காவல்​துறையும், ஊழல் தடுப்​புத் துறையும் கட்​டாயம் விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT