சென்னை: “பாஜக எதிர்ப்பில் திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து, தொலைநோக்குப் பார்வை கொண்டது” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீட் விவகாரத்தில் தற்கொலைகள் தொடர்கிறது. மத்திய கல்வித் துறை அமைச்சர் பொறுப்பில்லாத பதிலையும், அர்த்தமில்லாத விளக்கங்களையும் கொடுத்து வருகிறார். மோடி அரசுக்கு நீட் விவகாரத்தில் அக்கறை இல்லை. நீட் தேர்வால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 37 பேர் உயிரிழ்ந்துள்ளனர். நீட் தேர்வு வியபாரம் ஆகிவிட்டது. நேர்மையான தேர்வு முறை வேண்டும்.
கரூர் சம்பவம் மிகவும் வலி நிறைந்தது என முதல்வர் நேற்று சொல்லியிருந்தார். கர்நாடகா விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் - காங்கிரஸ் காங்கிரஸ் இடையே பேச ஒன்றுமில்லை. இது தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையிலான பிரச்சினை. அவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். அதுபோல தமிழகத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறைசொல்ல கூடாது” என்றார்.
பின்னர், ‘பாஜக எதிர்ப்பில் ஏன் திமுக - தவெக ஒரே அணியில் இருக்கக் கூடாது?’ என்ற விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு குறித்து பதிலளித்த அவர், ‘திருமாவளவன் கருத்து என்பது தொலைநோக்கு பார்வை. அவர் சொல்லும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். அவர் சொல்வது தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அதாவது, கேரளம் மாதிரி பாஜகவை எதிர்க்க தவெக - திமுக தயாராக வேண்டும் என்கிறார்’ என்று அவர் கூறினார்.