தமிழகம்

நீட் வினாத்தாள் கசிவது இளைஞர்களின் உயிரோடு விளையாடும் கொலைக் களம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வு வினாத்​தாள் கசிவதை வெறும் `பேப்​பர் லீக்' என கடந்​து​விட முடி​யாது. இது இளைஞர்​களின் உயிரோடு விளை​யாடும் கொலைக் களமாக இருக்​கிறது என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: மத்​திய பாஜக அரசு `டிஜிட்​டல் இந்​தி​யா' என மேடைக்கு மேடை முழங்​கு​கிறது. மத்​திய அரசின் மவுனத்​தின் நிழலில் இன்று கோடிக்​கணக்​கான டாலர் மதிப்​புள்ள ஒரு மாபெரும் தேர்வு மோசடி மாஃபியா உரு​வாகி​யுள்​ளது.

கல்வி முறையை டிஜிட்​டல் ஆக்​கு​வதற்​குப் பதிலாக, இந்​தத் தேர்வு மோசடித் தொழிற்​சாலை​யைத்​தான் நீங்​கள் டிஜிட்​டல் மயமாக்கி மாபெரும் சாம்​ராஜ்ஜிய​மாக வளர்த்​து வைத்துள்​ளீர்​கள். 2015-க்​குப் பிந்​தைய கால​கட்​டத்​தில் தேர்வு கேள்​வித்​தாள் கசிவு 70 சதவீத​மாக உள்​ளது.

இரக்​கமற்ற இந்த முறை​கேடு​களாலும், தேர்​வு​கள் ரத்து மற்​றும் மறு​தேர்வு அறி​விப்​பு​களாலும் கடும் மன உளைச்​சலுக்கு ஆளாகி, நாடு முழு​வதும் பல அப்​பாவி மாணவர்​கள் தற்​கொலை செய்​து​கொண்​டுள்​ளனர்.

இது வெறும் `பேப்​பர் லீக்' என கடந்​து​விட முடி​யாது. இது இளைஞர்​களின் உயிரோடு விளை​யாடும் கொலைக்களமாக உரு​வெடுத்​துள்​ளது. கேள்​வித்​தாள்​களைப் பாது​காப்​பாகக் கொண்டு செல்ல ராணுவத்தை பயன்​படுத்த வேண்​டிய அவல நிலைக்கு இந்த ஆட்​சி​யில் கல்​வித் துறை தள்​ளப்​பட்​டுள்​ளது.

பில்​லியன் டாலர் மதிப்​புள்ள கோச்​சிங் சென்​டர்​களாலும், மோசடி கும்​பலாலும் கல்​வித் துறை அதி​காரி​களும், முதலாளி​களும் மட்​டுமே கோடிகளைக் குவிக்​கிறார்​கள்; மாணவர்​களுக்கு மிஞ்​சுவது மரண​மும் ஏமாற்​ற​மும் மட்​டுமே.

நீங்​கள் நடத்​து​வது அரசாங்​க​மா, இல்லை கேள்​வித்​தாள் ஆலோ​சனை மைய​மா?. இதற்​குப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் உடனடி​யாக பதவி விலக வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT