| படம்: ம.பிரபு | 

 
தமிழகம்

அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்த விடாமல் கைது: தமிழக அரசு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: "மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தமிழகம் வரு​வதற்கு எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டம் நடத்த முயன்ற தங்​களை தமிழக அரசு கைது செய்​துள்​ளது" என தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

மத்​திய உள்​துறை அமைச்​சகம் சார்​பில் தென் மாநில முதல்​வர்​கள் மாநாடு மாமல்​லபுரம் அருகே கோவளத்​தில் நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா நேற்று சென்னை வந்​தார்.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, தமிழக காங்​கிரஸ் சார்​பில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் ஸ்டேடி​யம் அருகே நேற்று போராட்​டம் நடை​பெற்​றது.

மாநிலத் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தப் போராட்​டத்​தில் முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் கே.எஸ். அழகிரி, கே.​வி. தங்​க​பாலு, திரு​நாவுக்​கரசர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

போராட்​டத்​தின்​போது, இந்​திய மாணவர்​களின் எதிர்​காலத்தை பாதிக்​கும் வகை​யில் தொடர்ந்து வினாத்​தாள் கசிவு சம்​பவங்​கள் நடை​பெற்று வரு​கிறது.

இதற்கு மத்​திய அரசு உரியபதில் அளிக்​க​வில்​லை. தங்​களது உரிமை​களுக்​காக டெல்​லி​யில் போராடிய மாணவர்​கள் மீது காவல்​துறையை பயன்​படுத்தி வன்​முறை கட்​ட​விழ்த்​து​விடப்​பட்​டது என கோஷங்​கள் எழுப்​பப்​பட்​டன.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் மாணிக்​கம் தாகூர் கூறிய​தாவது: அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில்​தான் இந்​தப் போராட்​டத்தை நடத்​தினோம். அவர் டெல்​லி​யில் இருந்து சென்னை வரும்​போது நேரடி​யாகச் சென்று எதிர்ப்பு தெரிவிக்க திட்​ட​மிட்​டிருந்​தோம்.

ஆனால், அதற்கு தமிழக அரசு அனு​மதி அளிக்​க​வில்​லை. மாறாக, எங்​களை கைது செய்​துள்​ளனர். அமித்ஷா அரசி​யல் செய்​வதற்​காகவே தமிழகத்​துக்கு வரு​கிறார். தென் மாநிலங்​களில் பாஜகவை மக்​கள் புறக்​கணித்​துள்​ளனர்.

தென் மாநில முதல்​வர்​கள் மாநாட்​டில் தமிழகத்​தின் நலன் குறித்து தமிழக முதல்​வர் உரிய முறை​யில் பேசு​வார் என நம்​பு​கிறோம்.

காவிரி விவ​காரத்​தில் தமிழகத்​தின் உரிமையை ஒரு​போதும் விட்​டுக்​கொடுக்க முடி​யாது. மேகே​தாட்டு பகு​தி​யில் அணை கட்​டு​வதற்கு கர்​நாடக அரசுக்​கு ஒரு​போதும்​ அனு​ம​திக்​க மாட்​டோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT