தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

‘நூலகக் கொள்முதல் ஊழல் அறிவுலகத்தை ஆட்டி வைத்துவிட்டது’ - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

செய்திப்பிரிவு

விருதுநகர்: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடந்துள்ள நூலகக் கொள்முதல் ஊழல் அறிவுலகத்தையே ஆட்டி வைத்து விட்டது. இதுபோன்று விஞ்ஞான ரீதியான 2.0 ஊழல் எங்கும் நடந்தது கிடையாது. நாட்டிலேயே அதிக நூலகங்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

ஆனால், 2023-க்கு பிறகு நடந்த முறைகேடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கோவை, கன்னிமாரா, மதுரை நூலகங்களில் நடந்துள்ள ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்துக்கு அவமானத்தை தந்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு எழுத்தாளரும் வெட்கித் தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதை, துப்பாக்கி கலாசாரம் பல ஆண்டுகளாக உள்ளது. காவல்துறை எப்போது அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்குகிறதோ அப்போதுதான் சரியாகும். இவ்வாறு கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT