தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

‘தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடக்காது’ - மாணிக்கம் தாகூர் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம் என்ற முயற்சி நடக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது; தீபாவளியையொட்டி ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. பசுமைப் பட்டாசுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

அரசு நிர்வாகத்தில் நீண்டகாலமாக நிலவிய பிரச்சினைகளில் 80 சதவீதம் களைய வேண்டும். கமிஷன் பெறும் நடைமுறைக்குப் பலர் பழகிவிட்டனர். முதல்வர் விஜய் நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்துகிறார். தவெக அரசை கவிழ்க்க பாஜக, திமுக, அதிமுக கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்கின்றன. தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம் என்ற முயற்சி நடக்காது.

பணப்பெட்டிகளுடன் சிலர் களமிறங்கினாலும், எம்எல்ஏக்களை வாங்குவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். தவெக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்படும். விலைவாசி உயர்வில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தரமானப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT